தகாத உறவால் குடும்ப பெண்ணுக்கு அரங்கேறிய கொடூரம்!!

449

திருவள்ளூர்…

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த பெண் தகாத உறவால் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கனகம்மாசத்திரம் பகுதியைச் சேர்ந்த கஜேந்திரன் என்பவரின் மனைவி சுசிலாவுக்கு (34) குமரேசன் (15), கவுசிக் (13) என இரண்டு மகன்கள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக கணவனும், மனைவியும் 10 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்துவிட்டனர்.

சுசிலா கனகம்மாசத்திரம் பகுதியில் மகன்களுடன் வசித்து வந்தார். அவர் நகரியில் உள்ள மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்த்து வந்துள்ளார். மேலும் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலும் செய்து வந்துள்ளார். இந்நிலையில் சுசிலா வீட்டில் தனியாக இருந்த போது மர்ம நபர் ஒருவர் அவரை கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றார்.


மயக்கம் அடைந்த சுசிலாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர்.

அப்போது, முத்துக்கொண்டாபுரம் கிராமத்தை சேர்ந்த ரஞ்சித்குமார் என்பவரிடம் சந்தேகத்தின் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அதில், சுசிலாவுக்கும் ரஞ்சித்குமாருக்கும் பழக்கம் இருந்தது தெரியவந்தது.

அந்த இளைஞர் அடிக்கடி சுசிலாவிடம் பணம் வாங்கி வந்துள்ளார். இந்நிலையில், பிரச்சினை இருப்பதால் இரண்டரை லட்ச ரூபாய் பணம் வேண்டும் என கேட்டுள்ளார். ஆனால் சுசிலா பணம் தர மறுத்ததாக தெரிகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த அவரை கத்தியால் கொலை செய்ததாக காவல்துறையிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து ரஞ்சித்குமாரை கைது செய்த போலீஸார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.