தங்கையின் 6 வயது மகனைக் கொன்று புதைத்த அக்கா… தகாத உறவைத் தட்டிக்கேட்டதால் ஆத்திரம்!!

162

கர்நாடகாவில்..

கர்நாடகா மாநிலம், சிக்கபல்லாபுரம் மாவட்டம், முத்துகடஹள்ளிக் கிராமத்தைச் சேர்ந்தவர் அம்பிகா. இவரது தங்கை அனிதா. இவருக்கு குழந்தைகள் இருந்தனர்.

இந்த நிலையில், பெங்களூருவைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர், கப்பன் பார்க்கில் குழந்தையுடன் சந்தேகத்திற்கிடமான முறையில் இருந்த பெண்ணைப் பிடித்து போலீஸில் ஒப்படைத்தார்.

இதையடுத்து கப்பன் பார்க் போலீஸார், அந்த பெண்ணை பெரேசந்திரா போலீஸில் ஒப்படைத்தனர். அந்த பெண்ணிடம் விசாரணை நடத்திய போது, சிக்கபல்லாபுரத்தைச் சேர்ந்த அம்பிகா என்பது தெரிய வந்தது. அவரிடமிருந்து அவரது தங்கையின் குழந்தை என்பது தெரிய வந்தது.


எதற்காக அவர் குழந்தையைத் தூக்கி வந்தார் என போலீஸார் அதிர்ச்சியடைந்தனர். தனது தகாத உறவை தங்கை அனிதா தட்டிக் கேட்டதால் அவரைப் பழிவாங்குவதற்காக அவரது 2 குழந்தைகளைக் கடத்தி வந்ததாவும், அதில் 6 வயது சிறுவனைக் கொன்று புதைத்து விட்டதாகவும் அம்பிகா கூறினார்.

இதையடுத்து முடக்கடஹள்ளி கிராமத்தில் உள்ள மாந்தோப்பில் புதைக்கப்பட்ட சிறுவனின் உடலை போலீஸார் மீட்டனர். இதையடுத்து அம்பிகாவை இன்று கைது செய்த போலீஸார் அவரை காவலில் எடுத்து விசாரித்து வருவதாக மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் நாகேஷ் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.