தடம் மாறி ஏரியில் விழுந்த பேருந்து… கோர விபத்தால் 21 பேர் பலி! வெளியான பதைபதைக்கும் சிசிடிவி காட்சி!!

1055

சீனாவில் பேருந்து விபத்தில் மாணவர்கள் உட்பட 21 பேர் பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

சீனாவின் குய்ஷோ மாகாணத்தில் அன்ஷுன் நகரத்தில் பயணிகளை ஏற்றிக்கொண்டு அங்கிருக்கும் பாலத்தில் சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று திடீரென்று கட்டுபாட்டை இழந்தது.

இதனால், பாலத்துக்கும் குறுக்கே தாறுமாறாக சென்ற பேருந்து அங்கிருந்து ஏரியில் கவிழ்ந்து விபத்துக்குளானது.

இந்த கோர விபத்தில் 21 பேர் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்ததாகவும், 15 பேர் படுகாயமடைந்ததாகவும் அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், இந்த விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. விபத்து நடந்த நேரத்தில் பேருந்தில் பயணித்தவர்களின் மொத்த எண்ணிக்கை குறித்தும் எந்த விளக்கமும் இல்லை.

விபத்து நடத்த இடத்தில் தொடர் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. விபத்து நடத்த இடத்தில் இருந்த சிசிடிவியில் பேருந்து விபத்துக்குள்ளான போது வைக்கப்பட்டிருந்த காட்சிகள் தற்போது வெளியாகி அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.