அமெரிக்காவில்..
அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பின்னரும் செவிலியர் ஒருவருக்கு கொரோனா தொற்றிய விடயம் கவனம் ஈர்த்துள்ளது. கலிபோர்னியாவைச் சேர்ந்த செவிலியரான Matthew W. டிசம்பர் 18ஆம் திகதி கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.
பைசர் நிறுவனத்தின் தடுப்பூசி போட்டுக்கொண்டதும், மற்றவர்களைப் போல அவரும் சமூக ஊடகம் ஒன்றில் தான் தடுப்பூசி போட்டுக்கொண்டது குறித்து தகவல் வெளியிட்டு கம்பீரமாக ஒரு புகைப்படத்தையும் பதிவிட்டிருந்தார்.
ஆனால், டிசம்பர் 24ஆம் திகதி மாலை அவருக்கு குளிர் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. 26ஆம் திகதி மருத்துவமனைக்கு சென்ற Matthewக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டபோது, அவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.
இது குறித்து San Diego தொற்று நோயியல் நிபுணரான Dr Christian Ramers கூறும்போது, இது ஆச்சரியம்தான், ஆனால் எதிர்பார்க்காதது என கூற இயலாது என்கிறார். மேலும், Matthewக்கு தடுப்பூசி போடுவதற்கு முன்பே அவருக்கு கொரோனா தொற்றியிருக்க வாய்ப்புள்ளது என்றும் கூறுகிறார் அவர்.
கனேடிய மருத்துவர் ஒருவரிடம், தடுப்பூசி போட்டுக்கொண்டபின் கொரோனா தொற்ற வாய்ப்புள்ளதா என கேள்வி எழுப்பப்பட்டபோது,
தடுப்பூசி போட்டுக்கொண்டபின் கொரோனா வைரஸுக்கு எதிரான ஆன்டிபாடிகள் உடலில் உருவாக 10 முதல் 14 நாட்கள் வரை ஆகும்.
ஆகவே பாதுகாப்பாக இருத்தல் நலம் என்று கூறியிருந்தார். Dr Christian Ramersம் அதையேதான் கூறுகிறார்.
ஆகவே, தடுப்பூசி போட்டுக்கொண்டோம், இனி சுதந்திரமாக நடமாடலாம் என்று எண்ணுபவர்களுக்கு இது ஒரு எச்சரிக்கை செய்தி.
தடுப்பூசி போட்டுக்கொண்டாலும், வழக்கம் போலவே, New normal என்று கூறப்படுவதுபோல, கைகளை கழுவுதலும், மாஸ்க் அணிதலும், சமூக இடைவெளியும் பின்பற்றப்படுதல் கொரோனா தொற்றிலிருந்து நம்மை பாதுகாக்கலாம்.