தங்கராஜ்….
சென்னை தண்டையார்பேட்டை நேதாஜி நகரை சேர்ந்த தங்கம் என்கிற தங்கராஜ், கடந்த 10ம் தேதி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இவர் நேதாஜி நகர் பகுதிக்கு கடந்த 20 தினங்களுக்கு முன்னதாகவே குடிவந்துள்ளார்.
இவர் வாடகைக்கு வந்த வீட்டின் தரைத்தளத்தில் வசித்து அப்பு மற்றும் அவருடைய மனைவி மோனிசாவுடன் தங்கராஜ்க்கு நட்பு ஏற்பட்டுள்ளது. மோனிசாவை சந்திப்பதற்கு அவருடைய தோழி திவொற்றியூரைச் சேர்ந்த விக்டோரியா என்பவர் அடிக்கடி வந்துள்ளார்.
இதில் விக்டோரியாவுக்கும் தங்கராஜ்க்கும் நட்பு ஏற்பட்டுள்ளது. மேலும் விக்டோரியா தங்கராஜ்கும் அவ்வப்போது செலவிற்கு பணம் கொடுத்து உதவியுள்ளார்.
இவர்களின் நட்பு, விக்டோரியாவின் காதலனான பாலாஜிக்கு தெரியவந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பாலாஜி தங்கராஜை, தனது நண்பர்களுடன் சென்று சந்தித்துள்ளார். சந்திப்பின்போது, தனது காதலியான விக்டோரியாவுடனான நட்பினை கைவிடும்படி பாலாஜி தங்கராஜை மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதில் இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றவே பாலாஜி மற்றும் அவரது நண்பர்கள் மறைத்து வைத்திருந்த கத்தி மற்றும் அரிவாளால் தங்கராஜை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர்.
இரத்த வெள்ளத்தில் மிதந்த தங்கராஜ் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். பின்னர் தங்கராஜை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்ற பாலாஜி மற்றும் அவரது நண்பர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.