உத்தரப்பிரதேச மாநிலத்தில் மீரட்டை சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கு 2017ம் ஆண்டு தனியார் மருத்துவமனை ஒன்றில் அறுவை சிகிச்சை நடைபெற்றது. ஆனாலும் அவரது உடல்நிலை சரியாகவில்லை.
இதனையடுத்து 2022ம் ஆண்டு மற்றொரு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றார். அங்கு பரிசோதனை செய்ததில் அவரது இடது சிறுநீரகம் திருடப்பட்டு இருந்தது.
இதைத்தொடர்ந்து ஏற்கனவே அறுவை சிகிச்சை செய்யப்பட்ட மருத்துவமனையில் சென்று முறையிட்டபோது அவர்கள் மறுத்ததுடன், போலி ஆவணம் ஒன்றை கொடுத்து அவரது 2 சிறுநீரகங்களும் இருப்பதாக சாதித்தனர்.
அத்துடன் அவருக்கும், குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டலும் விடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மீரட் கோர்ட்டில் அந்த பெண் வழக்கு தொடர்ந்தார்.
நீதிமன்றம் அந்த மருத்துவமனை நிர்வாகம் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த போலீசாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்பேரில் அந்த மருத்துவமனை இயக்குனரும், மருத்துவருமான சுனில் குப்தா மற்றும் அவரது மனைவி உட்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்