தலையில் கிரிக்கெட் பந்து தாக்கி 15 வயது மாணவி உயிரிழந்த சோகம்!!

105

இந்திய மாநிலம் கேரளாவில் 15 வயது மாணவி கிரிக்கெட் பந்து தலையில் தாக்கியதில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த 15 வயது பாடசாலை மாணவி தபஸ்யா. இவர் கேரளாவின் மலப்புரத்தில் உள்ள கோட்டக்கலில் கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபட்டார்.

அப்போது எதிர்பாராத விதமாக கிரிக்கெட் பந்து தபஸ்யாவின் தலையில் தாக்கியுள்ளது. இதில் மயங்கி விழுந்த அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

பின்னர் அவர் கோழிக்கோட்டில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். ஆனாலும் அவரது உடல்நிலை மோசமடைந்துள்ளது. அதன் பின்னர் தபஸ்யாவின் குடும்பத்தினர் அச்சிறுமியை மகாராஷ்டிராவுக்கு கொண்டு சென்றுள்ளனர்.

இந்நிலையில் தபஸ்யா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கிரிக்கெட் பந்து பட்டு சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.