தலை முடியால் இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம் : இப்படியும் ஒரு துயர சம்பவமா?

1239

அமெரிக்காவில்..

அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் அமைந்துள்ளது நியூ ஆர்லியன்ஸ் சர்வதேச விமான நிலையம். இங்கே பொருட்களை பேக்கேஜ் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தார் ஜெர்மானி தாம்சன். 26 வயதான இவர் சில தினங்களுக்கு முன்னர் வழக்கம் போல தனது பணியில் ஈடுபட்டு வந்தார். அப்போது, விமான நிலையத்தில் உள்ள கன்வேயர் பெல்ட்டில் பொருட்களை எடுத்துக்கொண்டிருந்தார் ஜெர்மானி தாம்சன்.

அப்போது துரதிருஷ்டவசமாக அவரது தலைமுடி கன்வேயர் பெல்ட்டில் சிக்கியிருக்கிறது. இதனால் பதற்றமடைந்த அவர் அதில் இருந்து தன்னை விடுவித்துக்கொள்ள முயற்சித்திருக்கிறார். ஆனால், அவரால் முடியவில்லை. இதன் காரணமாக அவர் படுகாயமடைந்திருக்கிறார். அலறல் சத்தம் கேட்டு பதறிப்போன அருகில் இருந்த விமான நிலைய பணியாளர்கள் அவரை மீட்டு மருத்துவனைக்கு அழைத்துச் சென்றனர்.

ஆனாலும் காயம் காரணமாக ஜெர்மானி தாம்சன் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் விமான நிலையமே சோகத்தில் மூழ்கியது. இதுபற்றி கண்ணீருடன் பேசிய அவரது தாயார் ஏஞ்செலா டார்சி,”என்னால் இப்போதும் கூட அவள் இல்லை என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கடைசியாக பணிக்குச் செல்லும்போது “வீட்டிற்கு வந்ததும் உன்னை சந்திக்கிறேன்” என கூறிவிட்டு சென்றார். மிகவும் அன்பான பெண் அவர்.


என்னுடைய ஒரே மகள் இப்போது இல்லை என்பதை என்னால் நம்ப முடியவில்லை” எனத் தெரிவித்தார். ஜெர்மானி தாம்சன் கன்சாஸில் உள்ள ஹெஸ்டன் கல்லூரி மற்றும் மிசிசிப்பியின் ஜாக்சனில் உள்ள டூகலூ கல்லூரியில் சோசியாலஜி முடித்திருக்கிறார்.

ஜெர்மானியின் மரணம் குறித்து பேசிய GAT ஏர்லைன் கிரவுண்ட் சப்போர்ட் நிறுவனத்தின் CEO, மைக் ஹக்,” ஜெர்மானியின் மரண செய்தி கேட்டு பணியாளர்களின் இதயம் நொறுங்கிப்போனது.

அவர் எங்களுடைய குடும்பத்தில் ஒருவர் போன்றவர். அனைவரிடத்திலும் அன்பாக பேசக்கூடியவர். அவருடைய குடும்பத்திற்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும். சரியான பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்காததே இந்த விபத்திற்கு காரணமாக அமைந்திருக்கிறது” என்றார். இது விமான நிலையத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.