தாயுடன் சேர்ந்து மகன் செய்து வந்த மோசமான செயல் : அதிர்ச்சியூட்டும் சம்பவத்தின் பின்னணி !!

449

மதுரை….

மதுரை மாவட்டம் ஒத்தக்கடை பகுதியில் உள்ள நரசிங்கம், திருமால் நகர் உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் வீட்டின் கதவுகளை உடைத்து நகை, பணம் திருடுவது மற்றும் வீட்டில் உறங்கும் பெண்களிடம் செயின் பறிப்பில் ஈடுபடுவது என கடந்த சில மாதங்களாக தொடர் புகார்கள் ஒத்தக்கடை காவல்நிலையத்திற்கு வந்தன.

இதுதொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் உத்தரவின் பேரில் ஒத்தக்கடை காவல் ஆய்வாளர் ஆனந்ததாண்டவம் தலைமையிலான போலீசார் திவீர விசாரணை நடத்தி குற்றவாளிகளை பிடிக்க தீவிரம் காட்டினர்.

இதனிடையே ஒத்தக்கடையில் காவல் ஆய்வாளர் தலைமையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போது சந்தேகத்திற்குவிதமாக வந்த தாய் மகனிடம் விசாரித்த போது முன்னுக்கு பின் முரணாக தகவல் அளித்ததை தொடந்து காவல்நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.


அப்போது இவர்கள் ஒத்தக்கடை வட்டாரத்தில் 4 இடங்களில் கொள்ளை மற்றும் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டதும், காரைக்குடியை சேர்ந்த சாந்தி அவரது மகன் நாகராஜன் என்ற ராஜா என்பதும் தெரியவந்தது. பின்னர் அவர்களிடமிருந்து 25 பவுன் தங்கநகைகளையும் மீட்டனர்.

மேலும் தாய் மகன் இருவரும் கொள்ளை சம்பவங்களுக்கு செல்லும் போது மற்றவர்களுக்கு சந்தேகம் வர வாய்ப்பில்லை என்பதால் இதனை சாதகமாக பயன்படுத்தி கொள்ளை சம்பவங்களை அரங்கேற்றியது திடுக்கிட வைத்துள்ளது.

நல்லொழுக்கத்தையும், மனித பண்புகளையும் பிள்ளைக்கு கற்பிக்க வேண்டிய தாயே, கொள்ளையடிக்க கற்றுகொடுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது