திடீரென மாயமான பிளஸ் 1 மாணவர்கள்.. ஏரியில் சடலமாக மீட்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம்!!

178

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் புயப்பள்ளியில் வசிப்பவர் தேவானந்தா (வயது 17). அங்குள்ள மற்றொரு பகுதியை சேர்ந்த மாணவி ஷெபீன்சா (வயது 16). இருவரும் வெவ்வேறு பகுதிகளில் இயங்கும் பள்ளிகளில் பிளஸ் 1 படித்து வந்தனர்.

இதற்கிடையில் இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்து வந்தனர். நாளடைவில் காதலித்து வந்தனர்.

இந்நிலையில், சம்பவத்தன்று இருவரும் தலைமறைவாகியுள்ளனர். பெற்றோர் பல இடங்களில் தேடியும் இருவரையும் காணவில்லை. காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

புகாரின் பேரில், போலீசார் காணாமல் போன சிறார்களை தேடி வந்தனர், மேலும் இருவரின் உடல்களும் அங்குள்ள சாஸ்தம்கோட்டா ஏரியில் இருந்து மீட்கப்பட்டன. அவர்கள் தற்கொலை செய்து கொண்டது கண்டுபிடிக்கப்பட்டது, இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.