ஸ்பெயினில்..
ஸ்பெயின் நாட்டில் இளைஞர் ஒருவர் தனது திருமணத்தின்போது வேறொரு பெண்ணுடன் இருந்ததைப் பார்த்து மணமகள் கதறி அழுத வீடியோ வைரலாகி வருகிறது.
ஸ்பெயினில் திருமணத்தன்று மணமகள் வருங்கால கணவரால் ஏமாற்றப்பட்டது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் திருமண உடையில் இருக்கும் மணப்பெண் சொகுசு பேருந்தை நோக்கி ஓடி வருகிறார்.
அவர் பேருந்தில் இருக்கும் மணமகனை கதவை திறக்குமாறு கூறுகிறார். ஆனால் மணமகனோ கதவை திறக்கவில்லை. இதனால் பதற்றத்தில் பின்புறத்தில் சென்று பார்த்த பெண் அதிர்ச்சியுற்றுள்ளார். ஏனெனில், மணமகன் அரைகுறை உடையில் வேறொரு பெண்ணுடன் உள்ளே இருக்கிறார்.
இதைக் கண்டதால் மணமகன் தனக்கு துரோகம் செய்துவிட்டதாக மணப்பெண் அங்கேயே கண்ணீர்விட்டு கதறி அழுதுள்ளார். அவரது தோழிகள் மணமகளை ஆசுவாசப்படுத்த தண்ணீர் கொடுத்து ஆறுதல் கூறுகின்றனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.