திருமணத்திற்கு கட்டாயப்படுத்திய கள்ளக்காதலி வெட்டிக்கொலை!!

238

நீலகிரி மாவட்டம், கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட காசிம்வயல் பகுதியில் வசித்தவர் ஜெனிபர் கிளாடிஸ்(35). திருமணமான இவர், கணவனை பிரிந்து தனியாக வசித்து வந்தார். இதே பகுதியில் வசித்தவர் அலி(38).

மீன் வியாபாரி. இவர் தன் மனைவி, குழந்தையுடன் வசித்து வந்தார். இந்நிலையில் அலிக்கும், ஜெனிபர் கிளாடிசுக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.

அலி அடிக்கடி ஜெனிபர் கிளாடிசின் வீட்டுக்கு வந்து அவருடன் உல்லாசம் அனுபவித்து வந்தார். இதையடுத்து, தன்னை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என கிளாடிஸ் அடிக்கடி அலியிடம் வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் வழக்கம்போல் அலி நேற்று இரவு ஜெனிபர் கிளாடிசின் வீட்டுக்கு சென்றார். அப்போது அலி போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

சிறிது நேரத்தில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டபோது, ஜெனிபர் கிளாடிஸ் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அலியை கட்டாயப்படுத்தி உள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த அலி, கத்தியால் ஜெனிபர் கிளாடிசின் கழுத்து மற்றும் கையில் வெட்டியதில் கிளாடிஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் அலி, கத்தியுடன் கூடலூர் காவல் நிலையத்தில் சரணடைந்து கொலை சம்பவம் குறித்து தெரிவித்தார்.


இதையடுத்து போலீசார் அலியை கைது செய்தனர். பின்னர் கிளாடிசின் வீட்டிற்கு வந்து அவரது சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கூடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.