அமெரிக்காவில்..
அமெரிக்காவை சேர்ந்த தம்பதி 13 ஆண்டுகளாக ஒன்றாக வாழும் நிலையில் இருவரும் உண்மையில் சகோதர, சகோதரிகள் என்பதை கண்டுபிடித்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.
அதன்படி ஆண் ஒருவரும், பெண் ஒருவரும் கடந்த 13 ஆண்டுகளாக சேர்ந்து வாழ்கின்றனர். இருவருக்கும் திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகும் நிலையில் 2 குழந்தைகள் உள்ளது.
இந்த நிலையில் தான் இருவரும் ரத்த சொந்தம் கொண்டவர்கள் எனவும் சகோதரி, சகோதரி எனவும் தெரியவந்துள்ளது. இது குறித்து அப்பெண் கூறுகையில்,
நானும் அவரும் காதலிக்க தொடங்கிய போது எங்களுக்கு ஒரே குடும்ப பெயர் இருந்தது. நாங்கள் உறவினர்களா என்ற சந்தேகம் ஏற்பட்டது, ஆனால்,
இருவரும் உறவினர்கள் இல்லை என உறுதியாக நம்பி மண வாழ்வில் இணைந்தோம்.ஆனால் தற்போது சகோதரி, சகோதரி என தெரியவந்தது என கூறினார்.
அதன்படி இருவருக்கும் தந்தை ஒருவரே என தெரியவந்துள்ளது. இந்த தகவல் சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ள நிலையில் பலரும் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.