திருமணமான ஒரே மாதத்தில் புதுமாப்பிள்ளை எடுத்த அதிர்ச்சி முடிவு!!

205

தமிழக மாவட்டம் திருப்பூரில் திருமணமான ஒரே மாதத்தில் புதுமாப்பிள்ளை தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோயிலை சேர்ந்த லொறி ஓட்டுநர் மோகன் குமார். இவருக்கு மதுப்பழக்கம் இருந்துள்ளது.

34 வயதான இவருக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஈஸ்வரி என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. ஈஸ்வரியின் தாயாரும் அவருடனேயே வீட்டில் தங்கியுள்ளார்.

மோகன் குமாரின் மதுப்பழக்கத்தினால் மனைவி ஈஸ்வரி அவருடன் சண்டையிட்டதாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் மோகன்குமார் மதுபோதையில் வீட்டுக்கு வந்ததால் ஈஸ்வரியும், அவரது தாயாரும் திட்டியுள்ளனர். மேலும் அவர்கள் இருவரும் உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

இதனால் மனமுடைந்த மோகன்குமார் சோகத்தில் இருந்துள்ளார். இந்த நிலையில், மோகன் குமார் தனது வீட்டில் சேலையால் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டார்.


அவரது உடலை மீட்ட பொலிஸார்,இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.