நாமக்கல் மாவட்டம் வலையபட்டி அருகே உள்ள அ.வழவந்தி பகுதியை சேர்ந்தவர்கள் செல்வராஜ் (55), பூங்கொடி (50). இவர்களது மகன் சுரேந்திரனுக்கும் (28), வேட்டாம்பட்டியை சேர்ந்த சினேகாவுக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
சினேகா சில மாதங்களிலேயே கணவர் வீட்டாருடன் சண்டை போட்டு தாய் வீட்டுக்கு சென்று விட்டதாக தெரிகிறது.
இந்நிலையில் இன்று காலை செல்வராஜ் வீடு நீண்ட நேரமாக திறக்கப்படாததை கண்டு அக்கம் பக்கத்தினர் எருமைப்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து அங்கு சென்ற போலீசார் வீட்டை திறந்து ஆய்வு செய்தனர். அப்போது செல்வராஜ், பூங்கொடி, சுரேந்தர் ஆகியோர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதையடுத்து, போலீஸார் சடலங்களைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த நாமக்கல் ஏஎஸ்பி ஆகாஷ் ஜோஷி சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.
இதையடுத்து, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்து கொண்டது குறித்து எருமைப்பட்டி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.