திருமணமான பெண்ணை நடுரோட்டில் வழிமறித்து சரமாரியாக கத்தியால் குத்தியதில் அவர் உயிருக்கு போராடி வருகிறார். இதையடுத்து, இந்த சம்பவத்தில் ஈடுபட்ட அவரது முன்னாள் காதலனை போலீஸார் கைது செய்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ராஜீவ்காந்தி நகரைச் சேர்ந்தவர் இந்துமதி. 28 வயதாகும் இந்துமதிக்கு கார்த்திக் என்ற கணவனும், 5 வயதில் மகளும் உள்ளனர். இதனிடையே, கணவனுடன் ஏற்பட்ட தகராறால் கோபத்தில் தனது தாயார் வீட்டுக்கு சில மாதங்களுக்கு முன்பு இந்துமதி வந்துள்ளார்.
அப்போது தனிமையில் இருந்த இந்துமதி, பேஸ்புக்கில் தனது முன்னாள் காதலன் அஜித்குமாரை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். முதலில் சாதாரணமாக தொடங்கிய இவர்களின் பேச்சு, மீண்டும் காதலாக மலர்ந்தது.
இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்துக் கொண்டனர். இந்த சூழலில், திடீரென அஜித் குமாருடன் இந்துமதி பேசுவதை நிறுத்தியுள்ளார். ஏற்கனவே ஒரு முறை காதலித்து வேறு ஒருவரை திருமணம் செய்துவிட்டு, இப்போது மீண்டும் தன்னை இந்துமதி ஏமாற்ற நினைப்பதாக கார்த்திக்குக்கு தோன்றியது.
இதனால் இந்துமதியை அடிக்கடி வெளியே பார்த்து தகராறு செய்துள்ளார் கார்த்திக். “நீ தானே மறுபடியும் என்னிடம் பேசினாய்.. இப்போது என் மனதில் ஆசையை விதைத்துவிட்டு மீண்டும் ஏமாற்றலாம் என்று பார்க்கிறாயா?” எனக் கேட்டு கார்த்திக் சண்டை போட்டு வந்துள்ளார்.
இந்த சூழலில், சில தினங்களுக்கு முன்பு திருப்பத்தூர் பேருந்து நிலையம் அருகே இந்துமதியை வழிமறித்த காரத்திக், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து இந்துமதியின் வயிற்றிலும், நெஞ்சிலும் சரமாரியாக குத்தியுள்ளார் கார்த்திக்.
இதையடுத்து, அங்கிருந்தவர்கள் இந்துமதியை மீட்டும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், திருப்பத்தூர் காவல் நிலையத்தில் அஜித்குமார் சரணடைந்தார். அவரை கைது செய்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.