திருமணமான பெண்ணை நி.ர்வாணப்படுத்தி வீதியில் அழைத்து சென்ற கொடூர குடும்பம் : வெளியான அதிர்ச்சி வீடியோ!

389

குஜராத்….

இளம்பெண் ஒருவரை நி.ர்.வாணப்படுத்தி சாலையில் ஊர்வலமாக அழைத்து சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

குஜராத் மாநிலம் தாஹோத் மாவட்டத்தில் உள்ள கஜூரி எனும் கிராமத்தில் வசிக்கும் 23 வயது பெண் ஒருவரை கடந்த 6 ஆம் தேதி நி.ர்.வாணப்படுத்தி ஊர்வலமாக கூட்டிச் சென்றிருக்கின்றனர் அவரின் கணவரும், அவரது குடும்பத்தினரும்.

மேலும், பாதிக்கப்பட்ட அந்த பெண் வேறொரு நபருடன் கள்ளத்தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், சமீபத்தில் அந்த நபரும், அப்பெண்ணும் வீட்டில் இருந்து வெளியேறியுள்ளனர்.


இதனால், அப்பெண்ணை தேடி கண்டுபிடித்து கஜூரி கிராமத்துக்கு கூட்டி வந்த அவருடைய கணவரும், குடும்பத்தினரும் அப்பெண்ணை தண்டிக்கும் விதமாக அவரை நி.ர்.வாணப்படுத்தி ஊர் மக்கள் முன்னிலையில் ஊரவலமாக அழைத்துச்சென்றுள்ளனர்.

மேலும், சம்பவத்தன்று சம்பவம் நடைபெற்ற அன்று எடுக்கப்பட்ட அந்த வீடியோவில், அப்பெண்ணின் ஆடைகளை களைந்து நி.ர்.வாணப்படுத்துகின்றனர் கணவரும் அவருடன் நடந்து வந்தவர்களும். அருகில் இருக்கும் சில பெண்கள் மாற்றுத் துணி கொடுத்த போதிலும் அவற்றை தூக்கி எறிந்திருக்கின்றனர் உடன் வந்தவர்கள்.

அதன்பின்னர், அவரை அடித்தும், கணவரை தோளில் தூக்க வைத்தும் கொடுமைப்படுத்தியுள்ளனர். இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் இச்சம்பவத்தில் ஈடுபட்ட அப்பெண்ணின் கணவர், இரண்டு மைனர் சிறுவர்கள் உட்பட 14 பேரை கைது செய்துள்ளனர்.