திருமணமான 25 வயது பெண்ணை கொடூரமாக சீரழித்த 17 வயது சிறுவன்! சிக்கியது எப்படி?

1038

தமிழகத்தில் மாடு மேய்க்க போன 25 வயது மதிக்கத்தக்க நிர்வாணமாக சடலமாக கண்டுபிடிக்கப்பட்ட சம்பவத்தில், 17 வயது சிறுவன் அவரை வன்கொடுமை செய்து கொலை செய்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் உள்ள குண்டலிநாடு ஊராட்சி கீரைக்காடு கிராமத்தை சேர்ந்தவர் நடேசன்.

இவருக்கு 25 வயதில் தீபா என்ற மனைவியும், 7 மற்றும் 2 வயதில் இரண்டு குழந்தைகள் உள்ளனர். கணவர் விவசாயம் பார்த்து வந்ததால், கணவருக்கு உதவியாக தீபா ஆடு மேயக்க செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அதே போன்று சம்பவ தினத்தன்று தீபா ஆடு மேய்க்க சென்றுள்ளார். அங்கிருக்கும் கீரை காட்டு பகுதிக்கு சென்ற தீபா, வெகு நேரமாகியும் திரும்பாததால், சந்தேகம் அடைந்த நடேசன் மனைவியை பல்வேறு இடங்களில் தேடியுள்ளார்.

அதன் பின் உறவினர்கள் உதவியுடன் தேடிய போது, கீரைக்காடு காட்டுப்பகுதியில் நிர்வாண நிலையில் தீபாவின் சடலம் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.


அவர் உடல் முழுவதும் இரத்தம், வாயில் துணி வைத்து அடைக்கப்பட்டிருந்தது. மனைவியின் சடலத்தை பார்த்து நடேசன் கதறி அழ, இது குறித்து பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த பொலிசார், அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

வாயில் துணி வைத்து இறந்து கிடந்ததால், பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் பொலிசார் விசாரணை மேற்கொண்டனர்.

அதன் படி, சந்தேகத்தின் பேரில் 3 பேரை பிடித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போதுதான் 17 வயது மதிக்கத்த அருண் என்பவரை பொலிசார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

கொல்லிமலை அருகே உள்ள பொல்லாகாட்டுப்பட்டி குண்டூர்நாடு பகுதியைச் சேர்ந்தவர் அருண், ஒரு வாரத்திற்கு முன்பு, ஆத்துகாடு ஓடையில் தீபா குளிப்பதை மறைந்து நின்று பார்த்துள்ளான்.

அதன் பின், குளித்து கொண்டிருந்த தீபாவை தன் ஆசைக்கு இணங்குமாறு அழைக்கவும் செய்திருக்கிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த தீபா, அருண் கன்னத்தில் ஒரு அறை அறைந்தார்.

அறைந்ததோடு, கடுமையாக எச்சரிக்கை செய்துவிட்டு வீட்டுக்கு விரட்டி விட்டுள்ளார். இந்த நிலையில்தான், கடந்த 13-ஆம் திகதி அன்று ஆத்துக்காடு ஓடைக்குத் துணிகளை துவைக்க சென்றார்.

பிறகு, மாடுகள் காப்புக்காட்டுக்குள் சென்றதால், அதை விரட்டுவதற்காக பின்னாடியே சென்றார். அப்போது துரத்தி சென்ற அருண் தீபாவை ஆசைக்கு இணங்குமாறு கட்டாயப்படுத்தி உள்ளான்.

காப்புக்காட்டில் தனியாக சிக்கி கொண்ட தீபாவால் தப்பிக்க வேறு வழியில்லை. அதனால், சத்தம் போட்டுள்ளார். அதற்குள் அருண், தீபா அணிந்திருந்த உள்ளாடையை கழட்டி, வாயில் திணித்து இறுக்கமாக கட்டிவிட்டார். பிறகு பக்கத்தில் கிடந்த கல்லை எடுத்து தலையிலும் பலமாக தாக்கிஉள்ளார். இதில் தீபா மயங்கி விழுந்துவிட்டார்.. அதன்பிறகு தீபாவை நீண்ட நேரம் சீரழித்துள்ளான்.

இறுதியாக, திரும்பவும் அதே கல்லை எடுத்து கொலையும் செய்துவிட்டார்.. பிறகு தீபாவின் செல்போனை எடுத்து, தன் சொந்தக்காரருக்கு போன் செய்து, நடந்த விஷயத்தை கூறிவிட்டு, தான் தலைமறைவாகப்போவதாக கூறி, அங்கிருந்து தப்பியுள்ளான்.

தீபாவின் செல்போனை ஆய்வு செய்யும்போதுதான் அருண் சிக்கி உள்ளான். இவன் மைனர் என்பதால் இப்போதைக்கு சிறையில் அடைக்க முடியாது, இதனால் சிறுவர் சீர்திருத்த காப்பகத்தில் அடைக்க வாழாவந்திநாடு பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.