திருமணம் செய்து வைக்காத பாட்டியை இரும்புக்கம்பியால் அடித்துக் கொலை செய்த பேத்தி!!

190

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த பேரளையூர் கிராமத்தில் வசித்து வருபவர் கலியமூர்த்தி. இவரது மனைவி 70 வயது தனலட்சுமி இவருடைய மகன் பன்னீர்செல்வம்.

இவருடைய மனைவி புஷ்பவள்ளி. இந்த தம்பதிக்கு சிவக்குமார் என்ற மகனும், சிவரஞ்சனி, சிவசத்யா என்ற 2 மகள்கள். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு பன்னீர்செல்வமும், 10 ஆண்களுக்கு முன்பு சிவக்குமாரும் உயிரிழந்தனர்.

சிவரஞ்சனி திருமணமாகி கருவேப்பிலங்குறிச்சியில் வசித்து வருகிறார். சிவசத்யா மட்டும் திருமணம் ஆகாத நிலையில், தனது தாய் புஷ்பவள்ளி மற்றும் பாட்டி தனலட்சுமியுடன் வசித்து வந்தார்.

தனது சகோதரர் சிவக்குமார் உயிரிழந்த நாளில் இருந்து சிவசத்யா மனநலம் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில், சிவசத்யா கடந்த சில நாட்களாக தனது பாட்டி தனலட்சுமியிடம் திருமணம் செய்து வைக்க வேண்டும் எனக் கூறி தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த சிவசத்யா பாட்டியை அருகில் கிடந்த இரும்புக்கம்பியை எடுத்து தனலட்சுமியை சரமாரியாக தாக்கியுள்ளார்.


இதில் ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்த தனலட்சுமி, சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.சிவசத்யா நடந்த சம்பவம் குறித்து பக்கத்து வீட்டில் இருந்த தனது தாயிடம் கூறினார்.

இதைகேட்டு அதிர்ச்சி அடைந்து வீட்டிற்கு வந்த புஷ்பவள்ளி, தனலட்சுமியின் உடலை பார்த்து கதறித்துடித்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், தனலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இது குறித்து சிவசத்யா மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த விசாரணையில் நான் தான் பாட்டியை கொன்றேன். அருகில் போலீசார் யாராவது வந்தால் தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டல் விடுத்தார். அதிர்ச்சி அடைந்த போலீசார் அவரை கைது செய்ய முடியாமல், வேறு வழியின்றி வீட்டுக்காவலில் வைத்துள்ளனர்.