திருமணம் முடிந்து புகுந்த வீடு செல்லும் போது வாந்தி வருவதாக கூறிய புதுப்பெண்! கணவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!!

1169

இந்தியாவில் திருமணமான பின்னர் கணவருடன் காரில் சென்று கொண்டிருந்த புதுமணப்பெண் திடீரென கீழே இறங்கி ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் ராம்பிரசாத். இவர் மகள் அஞ்சு சைனி. இவருக்கும் இளைஞர் ஒருவருக்கும் பெரியோர்களால் நிச்சயம் செய்யப்பட்டு மூன்று நாட்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்கு பின்னர் புகுந்த வீட்டுக்கு கணவர் மற்றும் குடும்பத்தாருடன் காரில் அஞ்சு சென்று கொண்டிருந்தார்.

அப்போது ராஜஸ்தான், மத்தியபிரதேச மாநிலத்தின் எல்லையில் உள்ள பாலி பாலம் அருகில் கார் சென்று கொண்டிருந்த போது தனக்கு வாந்தி வருவதாக அஞ்சு கார் ஓட்டுனரிடம் கூறினார்.

இதையடுத்து ஓட்டுனர் காரை நிறுத்திய நிலையில் அவசரமாக கீழே இறங்கிய அஞ்சு அந்த பாலத்தில் இருந்து கீழே இருந்த ஆற்றில் குதித்தார். இதை பார்த்த அஞ்சுவின் கணவர் மற்றும் குடும்பத்தார் அதிர்ச்சியில் உறைந்தனர்.ஆனால் அவர்கள் யாருக்கும் நீச்சல் தெரியாததால் அவர்களால் அஞ்சுவை காப்பாற்ற முடியவில்லை.


இது குறித்து தகவலறிந்த பொலிசார் நீச்சல் தெரிந்த நபர்களுடன் அங்கு வந்தனர். பின்னர் வெகுநேர தேடுதலுக்கு பின்னர் அஞ்சு சடலமாக ஆற்றில் இருந்து மீட்கப்பட்டார். சம்பவம் தொடர்பாக விசாரித்து வரும் பொலிசார் கூறுகையில், அஞ்சு சம்மதம் தெரிவித்ததை அடுத்தே அவருக்கு இந்த திருமணம் நடந்துள்ளது.

மகிழ்ச்சியான மன நிலையில் இருந்த நிலையில் தான் அஞ்சு இந்த முடிவை எடுத்துள்ளார். சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம் என கூறியுள்ளனர்.