திருமணம் முடிந்த அன்று இரவே மணமகளுக்கு நேர்ந்த பயங்கரம்!!

250

ரஷ்யாவில் திருமணம் முடிந்த அன்று இரவே, மணமகள் 15ஆவது மாடியிலிருந்து கீழே விழுந்த பயங்கர சம்பவம் ஒன்று நிகழ்ந்தது.

ரஷ்யாவின் செயிண்ட் பீற்றர்ஸ்பர்கில் வாழ்ந்துவந்த Ksenia Vodyanitskaya (23) என்னும் இளம்பெண்ணுக்கும் Kirill (24) என்னும் இளைஞருக்கும் திருமணம் நடந்தது.

அவர்கள் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றின் 15ஆவது தளத்திலுள்ள ஒரு வீட்டில் அவர்கள் குடியேறியுள்ளார்கள்.

புதுமணத் தம்பதியர் உணவகம் ஒன்றில் பார்ட்டி ஒன்றை முடித்துவிட்டு வீடு திரும்பிய நிலையில், திருமண புகைப்படங்களை அப்போதுதான் சமூக ஊடகங்களில்தான் பகிர்ந்துகொண்டிருந்தார் Ksenia.

சிறிது நேரத்திற்குள், 160 அடி உயரத்திலிருந்த தன்வீட்டு ஜன்னலிலிருந்து கீழே தவறி விழுந்திருந்தார் அவர். பதறிப்போன Kirill அவசர உதவியை அழைத்துவிட்டு கீழே வந்து பார்த்தால், அங்கே அவரது அழகிய மணமகள் கோரமாக உயிரிழந்துகிடந்துள்ளார்.

திருமணமான அன்றிரவே Ksenia அகால மரணமடந்த விடயம், அவரது உறவினர்களையும் நண்பர்களையும் அதிர்ச்சியிலும் கடும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.