திருமண மேடையில் மணமகனை “பளார்” விட்ட மணமகள்!!

50

சமீபகாலமாக திருமணங்கள் கேலிக்கூத்தாகி வருகின்றன. பல விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்து பெரும் சர்ச்சைகளையும், உறவுக்குள் குழப்பங்களையும் ஏற்படுத்தி விடுகின்றன.

அந்த வகையில்திருமண வரவேற்பு மேடையில் மணமகன் முரட்டுத் தனமாக நடந்து கொண்டதால், ஆத்திரத்தில் மணமகள் பலர் முன்னிலையிலேயே அறைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

திருமண நாள் சம்பவங்கள் வாழ்நாள் முழுவதும் நெஞ்சில் நீங்கா இடம் பிடிக்க போகும் தருணங்கள்.இதனால் அனைவரும் திருமண நாள் வைபவங்கள் மகிழ்ச்சியை மட்டுமே தரவேண்டும் என விரும்புகின்றனர்.

ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், மணமகன் மற்றும் மணமகள் இருவரும் மேடையில் நின்று கொண்டு உறவினர்கள், நண்பர்களுடன் கைகுலுக்கி வாழ்த்துக்களை பெற்றுக் கொண்டிருந்தனர்.

ஏதோ பிரச்சனையால் கோபமாக இருக்கும் மணமகள், திடீரென விரக்தியை வெளிப்படுத்தி, இனிப்பை வாங்க மறுத்து விடுகிறார்.


மணமகன் வலுக்கட்டாயமாக இனிப்பை ஊட்டியதால் பொறுத்துக் கொள்ள முடியாத மணப்பெண், திடீரென மணமகனை 3 முறை அறைந்து ஊட்டிவிட்ட இனிப்பை கீழே துப்பிவிடுகிறார்.

இதனால், மணமகனும், அவரை சுற்றி நின்றிருந்த உறவினர்களும் அதிர்ச்சியில் உறைகின்றனர். இது குறித்த வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது.