சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பிரபல யூடியூபர் திவ்யா கள்ளச்சி உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பான பகீர் பின்னணி வெளிவந்துள்ளது.
இன்றைய நவீன உலகில் சோஷியல் மீடியாக்கள் எனப்படும் சமூக வலைத்தளங்களின் பங்களிப்பு அதிகமாக இருக்கிறது. ஆனால் பேஸ்புக், எக்ஸ், இன்ஸ்டாகிராம்,
யூடியூப் போன்ற சமூகவலைத்தளங்களை பெரும்பாலானார் நல்ல செயல்களுக்கு பயன்படுத்தி வந்தாலும், சிலர் இவற்றை தவறாக பயன்படுத்தி பிரபலமாகி வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். அதில் ஒருவர் தான் திவ்யா கள்ளச்சி.
தனெக்கான ஒரு யூடியூப் சேனல் தொடங்கிய அவர் ஆபாச பேச்சுகள், செய்கைகள் என வித்தியாசமாக என்னென்னமோ பேசி யூடியூப்,
இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டு மாதம்தோறும் லட்சக்கணக்கில் வருமானம் பார்த்து வந்தார். இவரின் அருவருக்கத்தக்க பேச்சு மற்றும் செய்களைகளை ரசிப்பதற்கு என்றே ஒரு கூட்டம் இருந்தது.
திவ்யா கள்ளச்சி ஆபாசமாக பேசி வருகிறார் என தொடர்ந்து குற்றம்சாட்டபப்ட்டு வந்த நிலையில், திவ்யா கள்ளச்சி, கார்த்தி உள்ளிட்டவர்கள் சிறார்கள் வைத்து ஆபாச படம் எடுப்பதாக சித்ரா என்ற யூடியூபர் பரபரப்பு குற்றச்சாட்டு கூறியிருந்தார். இந்நிலையில்,
ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஒரு விடுதியில் வைத்து சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக திவ்யா கள்ளச்சி, சித்ரா ஆகியோரும் அவர்களுக்கு உடைந்தையாக இருந்த ஆனந்த், கார்த்தி என்பவரையும் போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
அதாவது சம்பந்தப்பட்ட இரண்டு சிறுவர்களும் சமூகவலைத்தளங்களில் திவ்யா கள்ளச்சியிடம் பேசி வந்துள்ளனர். இந்நிலையில், அந்த சிறுவர்களை சந்திக்க ஸ்ரீவில்லிபுத்தூர் வந்த திவ்யா கள்ளச்சி அவர்களை விடுதிக்கு வரவழைத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
அதை வீடியோகாவும் பதிவு செய்துள்ளார். திவ்யா கள்ளச்சி சிறுவர்களை வைத்து ஆபாச படம் எடுப்பதாக கூறிய மற்றொரு யூடியூபர் சித்ராவும் இந்த சம்பவத்தில் உடந்தையாக இருந்துள்ளார்.
அந்த சிறுவர்களின் பெறோர்கள் கொடுத்த புகாரின்பேரில் திவ்யா கள்ளச்சி, சித்ரா, ஈரோட்டை சேர்ந்த கார்த்தி, ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த ஆனந்த் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
திவ்யா மீதும், சித்ரா மீதும் போக்சோ சட்டம் பாய்ந்துள்ளது. இந்நிலையில், கைதான திவ்யா கள்ளச்சி உள்ளிட்ட கும்பல் கைது செய்ததன் பகீர் பின்னணி வெளிவந்துள்ளது.
அதாவது திவ்யா கள்ளச்சி சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தும், அவர்களை பாலியல் சீண்டலில் ஈடுபட வைத்தும் வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்து வருவதாக
யூடியூபர் சித்ரா சென்னை டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்து இருந்தார். சென்னை டிஜிபி அலுவலகம் இந்த புகாரை விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு அனுப்பி வைத்தது.
விருதுநகர் போலீஸ் நடத்திய விசாரணையில் திவ்யா கள்ளச்சி தவறு செய்வது கண்டுபிடிக்கப்பட்டது தெரியவந்தது. இதற்கிடையே தான் திவ்யா கள்ளச்சி ஸ்ரீவில்லிபுத்தூர் விடுதியில் வைத்து சிறுவர்களுக்கு பாலியல் கொடுத்துள்ளார். அதை கார்த்திக் வீடியோவாக எடுத்துள்ளார்.
பின்பு இந்த வீடியோக்களை ஆபாச வலைத்தளங்களில் அப்லோட் செய்து பணம் சம்பாதிக்க இந்த கொடூர கும்பல் திட்டமிட்டுள்ளது தெரியவந்துள்ளது.
திவ்யா சிறுவர்களை தவறாக பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு கூறிய சித்ராவும் இதில் ஒரு முக்கிய குற்றவாளி என்பது அனைவரையும் அதிர வைத்துள்ளது. ஆரம்பத்தில் திவ்யாவும்,
சித்ராவும் இணைந்து தான் பலருக்கும் பாலியல் தொல்லை கொடுத்தும், பாலியல் சீண்டலில் சிக்க வைத்தும் வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்து வநதுள்ளனர்.
பின்பு பணத் தகறாறில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பிரிந்த நிலையில், சித்ரா திய்வா மீது புகார்கள் கொடுத்துள்ளார். இந்நிலையில், இவர்கள் அனைவரும் கூண்டோடு சிக்கியுள்ளனர்.