தீராத சந்தேகம்… காதலியை சுட்டுக் கொன்ற காதலன்: அதிர வைத்த சிசிடிவி காட்சிகள்!!

332

மும்பையில்..

உத்தரப்பிரதேச மாநிலம்,லக்னோவைச் சேர்ந்தவர் வந்தனா. தொழில்நுட்ப கலைஞரான வந்தனா, ரிஷப் நிகாம் என்பவரைக் காதலித்து வந்த நிலையில், ஊர் சுற்றி தங்களது காதலை வளர்த்து வந்தனர். இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலம், புனேயில் ஹிஞ்சவாடி பகுதியில் உள்ள ஓயோ டவுன் ஹோட்டலில் கடந்த 25-ம் தேதி தனியே அறை எடுத்து, இருவரும் ஒன்றாக தங்கியிருந்தனர். நேற்று முன் தினம் ஜனவரி 27ம் தேதி வந்தனாவுக்கும் ரிஷம் நிகாமிற்கும் தகராறு ஏற்பட்டது.

ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில், வந்தனாவின் நடத்தையின் மீது ரிஷம் நிகாம் குற்றம் சாட்டினார். திடீரென இருவருக்குமிடையே கைகலப்பு ஏற்பட்ட நிலையில், தான் வைத்திருந்த துப்பாக்கியால், ரிஷப் நிகாம் வந்தனாவை சுட்டார். இதில் வந்தனா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். வந்தனா உயிரிழந்ததை உறுதிப்படுத்தியதும், ரிஷம் நிகாம் தப்பியோடி விட்டார்.

ஹோட்டல் அறையில், இளம்பெண் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டதும், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், வந்தனாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். வந்தனாவுடன் வந்த ரிஷப் நிகாம் தலைமறைவானதால், ஹோட்டலில் இருந்த சிசிடிவி கேமிராக்களை போலீசார் சோதனை செய்தனர்.


அப்போது வந்தனா சுட்டுக்கொலை செய்யப்பட்ட பின்பு ஜனவரி 27-ம் தேதி இரவு 10 மணியளவில் ஓட்டலில் இருந்து ரிஷப் நிகாம் வேகமாக வெளியேறியது சிசிடிவி கேமிராக்களில் பதிவாகியிருந்தது. இந்நிலையில், தலைமறைவாக இருந்த ரிஷப் நிகாமை நேற்று மும்பையில் போலீசார் கைது செய்தனர். நடத்தையில் சந்தேகப்பட்டு காதலியை காதலன் சுட்டுக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.