இந்தியா…
இந்திய மாநிலம் உத்தர பிரதேசத்தில், காஜியாபாத் வீதிகளில் ஒருவர் துண்டிக்கப்பட்ட மனிதத் தலையுடன் தெருக்களில் நடந்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த பயங்கரமான சம்பவத்தில், 35 வயதான ஒருவர் தனது 65 வயதான அண்டை வீட்டாரை கோடரியால் வெட்டிக் கொன்றதாகக் கூறப்படுகிறது.
பின்னர், துண்டிக்கப்பட்ட தலையுடன் தெருக்களில் வலம் வந்த சில வீடியோ காட்சிகள் சமூக ஊடக தளங்களில் பரவ தொடங்கின. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து அவரைக் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர் சூரா கிராமத்தில் வசிக்கும் மாதவ் கோண்ட் என்றும் கொல்லப்பட்டவர் கரண் சிங் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அண்டை வீட்டார்களான இவர்கள் இருவருக்கும் இடையில் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது.
பொலிஸ் விசாரணையில் மாதவ் கோண்ட் கூறியதாவது:- கரண் சிங் ஒரு சூனியம் செய்பவர். எனது நிலத்தில் உள்ள பயிர்களை அழிக்க வேண்டுமென்றே சிங் தனது பண்ணையில் கால்நடைகளை கட்டவிழ்த்து விடுவார்.
எனது பண்ணையில் சிங் பன்றிகளை மேயவிடுவார். அது தீண்டத்தகாததாகக் கருதப்படுவதால், முழுப் பகுதியையும் சுத்தம் செய்ய வேண்டியிருந்தது.இது இருவருக்கும் இடையே சர்ச்சைக்கு வழிவகுத்தது என பொலிஸார் கூறினார். திங்கள்கிழமை மாலை, மீண்டும் இதேபோன்ற சம்பவம் நடந்ததை அடுத்து, கோபத்தின் உச்சிக்கு கோண்ட், சிங்கை கோடரியால் தாக்கி கொலை செய்ததாக கூறப்படுகிறது. அதன்பிறகு, துண்டிக்கப்பட்ட தலையுடன் தெருக்களில் நடந்து, அப்பகுதியில் எல்லோரையும் பீதியை உண்டாக்கினார்.
இந்நிலையில், ஐபிசி பிரிவு 302-ன் கீழ் மாதவ் கோண்ட் காவல்துறையினறால் கைது செய்யப்பட்டார். பின்னர், கரண் சிங்கின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.