துபாய்..
துபாய் செல்வந்தரை மணந்து கொண்ட பிரித்தானிய பெண்மணி தனது தினசரி வாழ்வில் பின்பற்ற வேண்டிய கடுமையான விதிமுறைகள் குறித்த தகவலை பகிர்ந்துள்ளார்.
பிரித்தானியாவின் சசெக்ஸ் பகுதியை சேர்ந்த சவுதி அல் நடக்(Soudi Al Nadak, 26) என்ற இளம்பெண்ணுக்கும், துபாய் செல்வந்தரான அவரது கணவர் ஜமால் அல் நடக்-கிற்கும்(Jamal Al Nadak, 32) 3 ஆண்டுகள் முன்பு திருமணம் நடைபெற்றது. 7 வருடங்களுக்கு முன்பு இருவரும் துபாயில் படித்து கொண்டு இருந்த போது நட்பு ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
செல்வந்தரை மணந்து கொண்டதால் பிரித்தானிய பெண்ணான சவுதி அல் நடக் ஆடம்பர சொகுசு வாழ்க்கையை தினம் தினம் அனுபவிக்கிறார். மேலும் தனது ஆடம்பர சொகுசு வாழ்க்கை குறித்து சமூக ஊடகத்திலும் சவுதி அல் நடக் பகிரும் நிலையில் அவரை இணைய வாசிகள் “தங்க வெட்டி”(gold-digger) என கிண்டல் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தங்களது மகிழ்ச்சியான திருமண வாழ்க்கைக்காக சில முக்கியமான விதிமுறைகளை கணவன்-மனைவியாக தாங்கள் பின்பற்றுவதாக இணையதள பதிவு ஒன்றில் சவுதி அல் நடக் தெரிவித்துள்ளார்.
அதன்படி, எதிர் பாலினத்தினருடன் எத்தகைய நட்புறவும் வைத்து கொள்ள கூடாது, அனைத்து கடவுசொல்களும் பகிர்ந்து கொள்ள வேண்டும், தங்கள் இருப்பிடம் குறித்த GPS லொக்கேஷனை இருவரும் தொடர்ச்சியாக பகிர்ந்து கொள்ள வேண்டும்.
அத்துடன் தாங்கள் இருவரும் திறந்த உரையாடலை எப்போதும் நடத்துவதாகவும், நான் எப்போது அடக்கமான ஆடைகளை மட்டுமே அணிவதாகவும் சவுதி அல் நடக் தெரிவித்துள்ளார். மேலும் சமூக ஊடகங்களில் பதிவுகளை பகிரும் போது ஜமால் மற்றும் அவரது குடும்பத்திற்கான மரியாதையை சீர்குழைக்காத வகையில் மிகவும் கவனமாக பதிவிடுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.