தூங்கி எழுந்ததும் பெண்ணுக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி!!

381

கனடாவில்..

கனடாவில் பெண் ஒருவருக்கு லொட்டரியில் பெரியளவிலான பரிசு விழுந்ததில் மகிழ்ச்சியில் திக்குமுக்காடி போயுள்ளார். மாப்ளி ரிட்ஜ் நகரை சேர்ந்தவர் சமந்தா லோவ். இவருக்கு தான் லொட்டோ மேக்ஸ் குலுக்கலில் $637,000 பரிசு விழுந்துள்ளது.

இது குறித்து சமந்தா கூறுகையில், நான் எப்போதும் போல தூங்கி எழுந்ததும் எனது இ-மெயிலை திறந்து பார்த்தேன். அப்போது தான் எனக்கு லொட்டரியில் இவ்வளவு பெரிய பரிசு விழுந்த தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதை என்னால் நம்பவே முடியவில்லை, மகிழ்ச்சியில் சத்தமாக கத்தினேன். என் முகம் முழுவதும் புன்னகையாக இருந்தது, இவ்வளவு பெரிய விடயம் வாழ்க்கையில் நடந்த பின்னர் சந்தோஷத்தில் சிரிக்காமல் எப்படி இருக்க முடியும்.


பரிசு பணத்தை வைத்து முதலில் சில கட்டணங்களை செலுத்தவுள்ளேன் என கூறியுள்ளார்.