தென்கொரியாவில் ஆழமான ஆற்றில் விழுந்த குழந்தை..! தன் உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய தமிழக இளைஞன்..!

1059

தென்கொரிய நாட்டின் தலைநகர் சியோல். இங்குள்ள மிக முக்கியமான ஆறுகளில் ஒன்று ஹன் என்ற ஆறு. இந்த ஆறு ஆனது 1.5 கிலோமீட்டர் பரப்பளவும், பல நூற்றுக்கணக்கான அடி ஆழமும் கொண்டது. இங்குள்ள செஜான் இன்று பல்கலைக்கழகத்தில் உயிரி தொழில்நுட்பத் துறை பேராசிரியராக புதுச்சேரியை சேர்ந்த ஆரோக்கியராஜ் செல்வராஜ் என்பவர் பணியாற்றி வருகிறார்.

சில நாட்களுக்கு முன்னர் ஆரோக்கியராஜ் மற்றும் அவரது நண்பர் ஆனந்த்குமார் ஹன் ஆற்றின் கரை பகுதிக்கு சென்றுள்ளனர். அப்போது அங்கு ஒரு 5 வயது சிறுவன் தன்னுடைய சகோதரியுடன் விளையாடி கொண்டிருந்தான். அவர்களுடைய பெற்றோர் சற்று தொலைவில் இருந்தனர். சில நிமிடங்கள் கழித்து சிறுவனின் சகோதரியும் அங்கிருந்து சென்றுவிட்டார்.

தன்னைச்சுற்றி யாரும் இல்லாத நேரத்தில் சிறுவன் ஹன் ஆற்றுக்குள் தவறி விழுந்துவிட்டான். குழந்தையின் அலறல் சத்தத்தை கேட்ட ஆரோக்கியராஜ் செல்வராஜ் உடனடியாக ஆற்றுக்குள் குதித்து குழந்தையை காப்பாற்ற முயற்சி செய்தார். குளம் மற்றும் ஏரியில் மட்டுமே நீச்சலடிக்க தெரிந்த ஆரோக்கியராஜ் காட்டாற்று வெள்ளத்தில் குதித்து குழந்தையை காப்பாற்றுவதற்காக மிகவும் பாடுபட்டார். ராட்சத அலைகள் எதிராக ஆரோக்கியராஜ் திறன்பட போராடி கையை பிடித்துக்கொண்டு கரை சேர்ந்தார்.


சமயத்தில் குழந்தையின் கரைக்கு திரும்பினர். தொப்பலாக நனைந்திருந்ததை கண்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். தனக்கு கொரிய மொழி தெரியாத காரணத்தினால் ஆரோக்கியராஜ் நிகழ்ந்தவற்றை நடித்துக்காட்டினார். புரிந்துகொண்ட குழந்தையை ஆரோக்கியராஜிடம் நன்றி தெரிவித்துக்கொண்டனர்.

இந்த செய்தியானது தென்கொரியா நாட்டின் ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்தியர் ஒருவர் தென் கொரியா நாட்டில் இந்தியர்களின் பெருமையை நிலை நாட்டி இருப்பது அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.