தெருநாய்க்கடியால் 4 வயது சிறுமி மரணம்.. தொடரும் விபரீதங்கள்!!

167

சமீபகாலமாக தெருநாய்கள் குழந்தைகளை கடிக்கும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது. இதனால் தொடர்ந்து அசம்பாவிதங்கள் நிகழ்ந்து வருகின்றன.

நாய்கள் கடிப்பதை குறைக்கும் வகையில் மாநில அரசுகள் நாய்களுக்கு தடுப்பூசிகளை செலுத்தியும் நாய் வளர்பதற்கு பல கட்டுப்பாடுகளையும் விதித்து வருகிறது. இருந்தபோதிலும் நாய்க்கடி சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன.

அந்த வகையில் கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் பகுதியைச் சேர்ந்த கீரலிங்கா, தனது மனைவி மற்றும் 4 வயது மகள் லாவன்யாவுடன் வசித்துவந்தார்.15 நாட்களுக்கு முன் லாவன்யா சாலையில் விளையாடிக் கொண்டிருந்தபோது அவரை தெருநாய்கள் துரத்தித் துரத்திக் கடித்தன.

இது குறித்த செய்திகள் புகைப்படங்கள் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. நாய்க்கடியால் படுகாயம் அடைந்த சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். சிகிச்சை பலனின்றி சிறுமி நேற்று உயிரிழந்தார்.