பிரித்தானியா………
பிரித்தானியாவில் அதிர்ஷ்டம் தேடி வந்த போதும், இளம் தம்பதியின் சிறிய அஜாக்கிரதையால் அவர்கள் அதை பெற முடியாமல் போனதால், அது குறித்து வேதனையுடன் பேசியுள்ளனர்.
பிரித்தானியாவின் Hertfordshire பகுதியைச் சேர்ந்தவர் Rachel Kennedy. 19 வயது பெண்ணான இவருக்கு Liam McCrohan என்ற 21 வயது காதலன் உள்ளார்.
இந்நிலையில், இந்த தம்பதி எப்போதும் வழக்கம் போல் யூரோ மில்லியன் லொட்டரி டிக்கெட்டில் தங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக 6, 12, 22, 29, 33, 6 மற்றும் 11-ஐ தொடர்ந்து குறிப்பிட்டு வாங்கி வந்துள்ளனர்.
இப்படி இவர்கள் தொடர்ந்து ஐந்து வாரம் வாங்கி வந்துள்ளனர். இதையடுத்து கடந்த வெள்ளிக் கிழமை நடந்த லொட்டரி குழுக்களில், இந்த எண்ணுக்கு சுமார் 182 மில்லியன் பவுண்ட் ஜாக்பாட்டாக அடித்துள்ளது.
இந்த தம்பதி டிக்கெட்டை ஆன்லைனில் தானாக வாங்கும் பதிவை செய்து வைத்துள்ளனர். அதன் படி ஒவ்வொரு வாரமும், ஆன்லைன் மூலம் தொடர்ந்து லொட்டரி டிக்கெட் வாங்க, அதற்கான பணத்தை ஆன்லைனில் எடுப்பதுமாக இருந்து வந்துள்ளது.
அதன் படி வெள்ளிக் கிழமை ஜாக்பாட் குலுக்கலில் தங்களின் எண், வந்ததால், இதைக் கண்டு இன்ப அதிர்ச்சியில் மூழ்கிய Rachel Kennedy உடனடியாக தன் காதலன் மற்றும் அம்மாவிடம் கூறியுள்ளார்.
இதை முதலில் நம்பாமல் இருந்த அவர், அதன் பின் இது நம்முடைய வழக்கமான எண் என்று துள்ளிக் குதித்தார்.
182 மில்லியன் பவுண்ட் வென்ற மகிழ்ச்சியில் அவர் உடனடியாக அந்த லொட்டரி நிறுவனத்தை தொடர்பு கொண்டு கொண்ட போது, அவர்களும் ஆம் அந்த எண்ணுக்கு தான் ஜாக்பாட் அடித்துள்ளது.
ஆனால், நீங்கள் டிக்கெட் செலுத்துவதற்கான பணம் உங்கள் கணக்கில் இல்லை, அதனால் நீங்கள் டிக்கெட் பெறவில்லை என்று கூறியுள்ளனர். இதைக் கேட்டவுடன் Rachel Kennedy பேரதிர்ச்சி அடைந்துள்ளார். முற்றிலும் மனம் உடைந்து போன அவர், தன்னுடைய இந்த இந்த எண் துரதிஷ்டவசமானது என்று வேதனையடைந்தார்.
கொஞ்சம் இவர்கள் தங்களுடடைய ஆன்லைன் கணக்கை சரிபார்த்து வைத்திருந்தால், அதில் டிக்கெட்டிற்கு தேவையான பணம் இருந்திருந்தால், இன்று இவர்கள் தான் மில்லியனர்களாக மாறியிருப்பார்கள், சிறிய அஜாக்கிரதையால் இன்று பெரிய அளவில் இழந்து நிற்கின்றனர்.