தோழிகளாக பழகி காஃபியில் சயனைடு அடுத்தடுத்து 4 கொலைகள்.. அலற வைத்த தில்லாலங்கடி லேடிஸ்!!

205

ஆந்திராவில் முன்பின் தெரியாதவர்களிடம் தோழிகள் போல் பழகி, நைசாக காஃபியில் சயனைடு கலந்து கொடுத்து கொலை செய்து நகைகளை கொள்ளையடித்து வந்த தில்லாலங்கடி லேடிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.

அடுத்தடுத்து 4 கொலைகள் செய்துள்ள 3 பெண்களிடமும் இது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகிறார்கள். இதில் பரபரப்பு தகவல்கள் வெளிவந்துள்ளன.

முன்பின் தெரியாத நபர்களிடம் நைசாக பேச்சு கொடுத்து, அவர்களிடம் நட்பை ஏற்படுத்திய பிறகு காபியில் சைனைடு கலந்து கொடுத்து கொலை செய்யும் சீரியல் கில்லர்கள் சிக்கியுள்ளனர்.

மூன்று பெண்கள்தான் இந்த கொடூர செயலில் ஈடுபட்டு வந்துள்ளனர். ஆந்திர மாநிலத்தை அதிரை வைக்கும் வகையில், இவர்கள் கொலை சம்பவத்தை அரங்கேற்றியுள்ளனர்.

சினிமா காட்சிகளை மிஞ்சும் அளவுக்கு நடந்த இந்த கொலை – கொள்ளை குறித்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:- ஆந்திர மாநிலம் தெனாலி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் முங்கப்பா ரஜினி, மடியலா வெங்கடேஷ்வரி, குல்ரா ரமனம்மா.

இவர்கள் மூன்று பேரும், முன் பின் தெரியாதவர்களிடம் முதலில் நட்பாக பேச ஆரம்பிப்பார்களாம்.. பின்னர் தங்கள் கொண்டு வந்த சையனடு கலந்த காபியை அவர்களை குடிக்க சொல்லுவார்களாம்.. வேண்டாம் என்று மறுத்தால் கூட அன்பு கட்டளை போடுவது போல வற்புறுத்தி குடிக்க வைத்து இருக்கிறார்க்ள்.


விஷம் கலந்த காபியை குடித்ததும் உயிரிழக்கும் பெண்களிடம் இருந்து நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றுவிட்டு உல்லாச வாழ்க்கை வாழ்ந்துள்ளனர். ஆந்திராவில் 4 பேரை அடுத்தடுத்து கொலை செய்து உள்ள்னர். இதில் ஒரு ஆணும் அடங்குவார். கடந்த ஜூன் மாதம் இந்த கொலை சம்பவம் நடைபெற்றுள்ளது.

கடந்த ஜுன் மாதம் நாகுர் பி என்ற பெண்ணை கொலை செய்துள்ளனர். அதன்பிறகு மேலும் இரண்டு பெண்களை கொலை செய்ய முயன்று இருக்கிறார்கள்.. ஆனால் அதிர்ஷ்டவசமாக அவர்கள் இருவரும் உயிர் தப்பினர். இதையடுத்துதான் இந்த கொடூர வில்லிகள் போலீஸ் வசம் சிக்கியிருக்கிறார்கள். கடந்த வியாழக்கிழமை போலீசார், மூன்று பேரையும் கைது செய்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், 32 வயதான மடியலா வெங்கடேஷ்வரி மீது ஏற்கனவே பல வழக்குகள் இருப்பது தெரியவந்தது. தெனாலி மாவட்டத்தில் 4 ஆண்டுகளுக்கு முன்பாக தன்னார்வலாராக பணியாற்றி வந்த மடியலா, கம்போடியாவிற்கு சென்றுள்ளார். அங்கு சைபர் கிரைம் குற்றங்களிலும் ஈடுபட்டு இருந்திருக்கிறார். கைது செய்யப்பட்ட இந்த 3 பேரிடம் இருந்தும் சையனடு மற்றும் ஆதாரங்களை போலீசார் கைப்பற்றினர்.

இவர்களுக்கு சையனடு வினியோகம் செய்த நபரையும் போலீசார் கைது செய்துள்ளனர். தெனாலி மாவட்டத்தில் நடந்த இந்த தொடர் கொலைகள் கேரளாவில் நடைபெற்ற ஜாலி ஜோஷப் சையனடு கொலைகளை நினைவு படுத்தும் வகையில் இந்த தொடர் கொலைகள் அமைந்துள்ளது.

ஆந்திராவில் கைது செய்யப்பட்டுள்ள 3 பெண்களும் தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். முன் பின் தெரியாத நபர்களிடம் நெருங்கி பழகக் கூடாது என்றும், ரயில் பயணத்தின் போதோ அல்லது பொது இடங்களில் பழக்கம் இல்லாதவர்கள் கொடுக்கும் எந்த ஒரு உணவு பொருளையும் வாங்கி சாப்பிடக் கூடாது என்று போலீசார் எச்சரித்தனர்.