நடிகர் அர்ஜீனின் மகள் ஐஸ்வர்யாவுக்கு கொரோனா தொற்று!.. அவரே வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!

898

இந்திய அளவில் கொரோனா வைரஸ் ஆனது அனைத்து மக்களையும் பாதிப்படைய வைத்துக்கொண்டு இருக்கிறது.

அதில், முக்கியமாக தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகமாகவே காணப்படுகிறது. இதற்கு அரசு பரவலை தடுக்க முயற்ச்சி வருகிறது.

இதனையடுத்து, திரைப்பிரபலங்களுக்கு கொரோன வைரஸ் தாக்கி வரும் நிலையில், தற்போது அர்ஜுனின் மகளும், நடிகையுமான ஐஸ்வர்யா அர்ஜுனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பிரிவில் வெளியிட்ட பதிவில், “சமீபத்தில் எனக்கு கோவிட்-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. நான் வீட்டுத் தனிமையில், மருத்துவர்களின் ஆலோசனையின்படி தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளேன்.

கடந்த சில நாட்களாக என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் யாராக இருந்தாலும், உங்களைக் கவனித்துக் கொள்ளுங்கள். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள். தயவுசெய்து முகக்கவசம் அணியுங்கள்.

நல்ல ஆரோக்கியத்துடன் விரைவில் உங்களைச் சந்திக்கிறேன். அன்புடன், ஐஸ்வர்யா அர்ஜுன்” என்று தெரிவித்துள்ளார்.