நடிகர் முரளியின் தம்பி என்று சொல்ல முடியாமல் போ ராடி ஜெயித்த வில்லன் நடிகர்.!

965

டேனியல் பாலாஜி அபார திறமைசாலி வளர்ந்துவரும் அற்புதமான நடிகர். தனக்கென்று ஒரு தனி பாணியை வைத்துக் கொண்டு மிரட்டி வருபவர்.பொல்லாதவன் படத்தில் தனுஷை விட இவர் அதிகமாகப் பேசப்பட்டவர். ஹீரோ வாய்ப்பை நாசுக்காக மறுத்து வரும் புத்திசாலி நடிகர். சூட்டிங் ஸ்பாட்டில் மிக எளிமையாக இருப்பார்.

கேரவன் கொடு,ஸ்டார் ஹோட்டல் சாப்பாடு கொடு என்றெல்லாம் அடம் பிடிக்கும் டைப் அல்ல.அதே போல டேனியல் இயக்குனர்களின் நடிகர் என்று பெயர் பெற்றவர். இப்படி நிறைய சொல்கிறார்கள் டேனியல் பற்றி, யாரும் அறியாத இன்னொரு பக்கம் இருக்கிறது.

சோகங்கள் நிறைந்த பக்கம் அது. டேனியல் நடிகர் முரளியின் சொந்தத் தம்பி.ஆனால் அம்மா வேறு. முரளி அப்பா சித்தலிங்கையா கன்னடப் படவுலகில் பெரிய இயக்குனராக,தயாரிப்பளாரக இருந்தவர்.அவருக்கு இரண்டு மனைவிகளாம். மூத்த மனைவயின் மகன் முரளி. இளைய மனைவியின் மகன் தான் டேனியல் பாலாஜி.


ஆனால், தமிழ் திரையுலகில் அண்ணன் முரளியை எந்த வகையிலும் தொந்தரவு செய்யாமல் முரளியின் தம்பி என்று கூட சொல்லி வாய்ப்பு கேட்காமல் சுயம்புவாக நடிகரானவர் டேனியல்.முரளி மரணம் அடையும் வரை எங்கேயும் அவரின்தம்பி என்று சொல்லிக் கொண்டதே இல்லை டேனியல்..! பல கஷ்டங்கள், பசி பட்டினியோடு வாய்ப்பு தேடி, இன்று நல்ல நடிகர் என்று பெயர் எடுத்து தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் டேனியல் பாலாஜி.நண்பர்களே இவருக்கு வாழ்த்துச் சொல்லுங்களேன்..!