நடிகர் ரஜினிகாந்த் எந்த மாதம் கட்சி தொடங்குவார்? வெளியான முக்கிய தகவல்!!

862

நடிகர் ரஜினிகாந்த் எப்போது கட்சி தொடங்குவார் என்பது குறித்து கராத்தே தியாகராஜன் தகவல் தெரிவித்துள்ளார்.

இன்று காமராஜரின் 118-வது பிறந்ததினத்தை முன்னிட்டு சென்னை காமராஜர் சாலையில் உள்ள அவரது சிலைக்கு கராத்தே தியாகாராஜன் மரியாதை செலுத்தினார்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த கராத்தே தியாகாராஜன், ரஜனி ஆகஸ்ட் மாதம் கட்சி ஆரம்பிப்பதாக தகவல் வந்தது. ஆனால் கொரோனா காரணமாக தள்ளிப்போகிறது. நவம்பரில் நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.

முன்னதாக கடந்த மார்ச் மாதம் 12ம் திகதி சென்னை லீலா பேலஸில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினி, ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அரசியலில் ஸ்திரத்தன்மை இல்லாமல் ஆட்சி எப்போது விழுகும் என்ற நிலை இருந்தது.


அப்போதுதான் 2017-ல் நான் அரசியலுக்கு வருகிறேன் என்று சொன்னேன். ‘சிஸ்டம் சரியில்லை, அதை சரிசெய்ய வேண்டும், மக்கள் மனதில் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும்’ என சொன்னேன்.

இதனை சரி செய்யாமல், அரசியலில் மாற்றத்தைக் கொண்டு வராமல் ஆட்சி மாற்றம் நிகழ்ந்தால் மீன் குழம்பு செய்த பாத்திரத்தைக் கழுவாமல் சர்க்கரை பொங்கல் செய்தால் எப்படி இருக்குமோ அப்படித்தான் இருக்கும். அதனால், அரசியல் மாற்றத்துக்கு நான் சில திட்டங்களை வைத்திருந்தேன். அதில் 3 முக்கிய திட்டங்கள் உள்ளன என ரஜினிகாந்த் தெரிவித்தார்.