நடுக்காட்டுக்குள் சிக்கிய இளம்பெண்.. 9 நாட்களுக்கு பின் பொலிசார் கண்ட அதிர்ச்சி காட்சி!

978

அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர், 18வயது ஜியோவானா என்பவர் தேனீர் அருந்த காருடன் வெளியில் சென்று இருக்கிறார்.

பெற்றோரிடம் எந்த தகவலும் அளிக்காமல் அவர் வெளியே சென்ற நிலையில், இரவான பின்னரும் மகளை காணாத பெற்றோர் காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து, இளம்பெண்ணை மீட்கும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டனர்.

இதையடுத்து, பிரதான சாலை ஒன்றில் அவரது காரை கண்டுபிடித்துள்ளனர். ஒருவாரம் ஆன பின்னரும் அவர் கிடைக்காத நிலையில் தேடுதல் வேட்டை நடைபெற்றது.

ஒன்பது நாட்களுக்குப் பின்னர் அடர்ந்த வனப்பகுதியில் உணவு, உறக்கம் இன்றி சோர்ந்த நிலையில் பயத்துடன் அந்த பெண்ணை காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.


காட்டு பழங்கள் மற்றும் ஓடை நீரை உண்டு அந்த பெண் உயிர் பிழைத்ததாக காவல்துறையிடம் தெரிவித்துள்ளார். எதையும் பேசும் நிலையில் அவர் இல்லை. உடனடியாக அவரை மருத்துவ சிகிச்சைக்கு கொண்டு சென்றனர்.

அவர் முழுவதும் குணம் அடைந்த பின்னர், அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். காருக்கு எரிபொருள் தேடி வழி தவறி காட்டிற்குள் தொலைந்து போனதாக கூறப்படுகிறது.

அவருடைய செல்போனும் வேலை செய்யவில்லையாதனால் இளம்பெண் காட்டுக்குள் சிக்கி மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.