செயற்கைக் கோள்கள்…
விர்ஜின் நிறுவனத்தின் மாற்றியமைக்கப்பட்ட விமானம் மூலம் நாசாவின் செயற்கைக் கோள்கள் நடுவானில் இருந்து வெற்றிகரமாக ஏ வ ப்பட்டன.
கலிபோர்னியாவை தளமாகக் கொண்ட விர்ஜின் நிறுவனம் நடுவானில் இருந்து செயற்கைக் கோளை ஏ வு ம்முறையைக் கண்டுபிடித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து போயிங் விமானமொன்று மா ற் றியமைக்கப்பட்டு ராக்கெட் செலுத்தூர்தியாக்கப்பட்டது. இந்த ஊர்தியில் இருந்து நாசாவின் லாஞ்சர் ஒன் என்ற 70 அடி நீள ராக்கெட் நடுவானில் இருந்து விண்ணுக்கு ஏ வ ப் பட்டது.
இறுதியில் லாஞ்சர் ஒன்னில் சுற்றுவட்டப் பாதையை அடைந்து விட்டதாக நாசா அறிவித்துள்ளது. மேலும் அதனுள் வைக்கப்பட்டிருந்த 10 சிறிய செயற்கைக் கோள்களும் அதனதன் புவி வட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் நாசா தெரிவித்துள்ளது.