நாடளாவிய ரீதியிலான ஊரடங்கு சட்டம் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்!!

1284

யாழ்ப்பாணம் உட்பட 21 மாவட்டங்களில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் இன்று(04.05.2020 காலை 5 மணிக்கு தளர்த்தப்படவுள்ளது.

எனினும், கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம் ஆகிய மாவட்டங்களில் தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு எதிர்வரும் 11ஆம் திகதி அதிகாலை 5 மணிவரை நீடிக்கப்பட்டுள்ளது.

21 மாவட்டங்களில் இன்று முதல் புதன்கிழமை வரை காலை 5 மணி முதல் இரவு 8 மணிவரை ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும்.

அதன் பின்னர், புதன்கிழமை இரவு 8 மணிமுதல் 11 ஆம் திகதி காலை 5 மணிவரை நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் என்று ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.