நாட்டில் ஏற்பட்ட திடீர் பள்ளம்! காரணம் என்ன? வெளிவந்த முக்கியமான தகவல்!!

412

ரஷ்யா……….

ரஷ்யாவில் ஏற்பட்ட திடீர் பள்ளம் குறித்து பல்வேறு கருத்துக்கள் கூறப்பட்டு வருகிறது.

சைபீரியாவில் உள்ள தந்த்ரா பகுதியில் தொலைக்காட்சிக் குழுவினர், சுமார் 100 அடி ஆழமும், 70 அடி விட்டமும் கொண்ட பிரமாண்டமான பள்ளம் ஒன்றினைப் படம் பிடித்தனர்.

கடந்த 2013ம் ஆண்டு முதல் இப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட 9வது பள்ளம் இதுவாகும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

விண்கல் விழுந்ததால் பள்ளம் ஏற்பட்டிருக்கலாம் என்றும், பறக்கும் தட்டுக்கள் தரையிறங்கியிருக்கலாம் என்றும்,


நிலத்தடி ராணுவ ரகசிய அறைகள் இருக்கலாம் என்றும் பல்வேறு விதமாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் மீத்தேன் வாயு வெடிப்பினால் இந்தப் பள்ளம் ஏற்பட்டிருக்கலாம் என்ற நம்பிக்கையில் விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகின்றனர்.

இந்த ஆய்வின் முடிவில் முக்கிய தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.