நான் டாக்டர் ஆகணும்… 10 வருடத்திற்கு முன் சூர்யாவிடம் கேட்ட ஏழை சிறுவன்! தற்போதைய நிலை என்ன தெரியுமா?

1124

நடிகர் சூர்யா தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர்.

இவர் சினிமா உலகின் நடிப்பைத் தாண்டி பல உதவிகளையும் சமூகத்திற்கு செய்து வருகிறார்.

பல நற்பணிகளை செய்ய கடந்த 2006 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதுதான் அகரம் அறக்கட்டளை. தரமான கல்வியை சமுதாயத்தின் அனைத்து தரப்பினருக்கும் கொண்டு சேர்ப்பது தான் இந்த அறக்கட்டளையின் நோக்கம்.

நடிகர் சூர்யாவின் உதவியால் தற்போது கூலித் தொழிலாளியின் மகன் ஒருவர் மருத்துவராக மாறி இருக்கிறார்.


10 வருடம் முன் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடிகர் சூர்யா சார்பாக அகரம் மூலம் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த நந்த குமார் என்பவர் கலந்து கொண்டு இருந்தார்.

அந்த நிகழ்ச்சியில் சூர்யாவிடம் உதவி கேட்டு இருந்த நந்தகுமார் நான் தற்போது இரண்டாம் வகுப்பு படித்திருக்கிறேன். என்னுடைய மதிப்பெண் 1160 எனக்கு மருத்துவம் படிக்க வேண்டும் என்று ஆசை ஆனால் எனக்கு வசதி இல்லை என்று கூறி இருந்தார்.

பின்னர் கூலி வேலை பார்க்கும் நந்தகுமாரின் பெற்றோரிடமும் அந்த நிகழ்ச்சியில் சூர்யா பேசினார். இப்படி ஒரு நிலையில் நடிகர் சூர்யா உங்கள் பையன் கண்டிப்பாக டாக்டர் படிப்பான் என்று உறுதியளித்திருந்தார்.

தற்போது அவர் சொன்னது போலவே சென்னை எம் எம் சி மருத்துவ கல்லூரியில் சீட் வாங்கி கொடுத்து அவர் படித்து முடிக்கும் வரை அத்தனை செலவையும் சூர்யாவின் அகரம் கட்டளையை ஏற்று இருக்கிறது. நந்தகுமார் மருத்துவம் படித்துவிட்டு பெரம்பலூரில் மருத்துவராக பணியாற்றி வருகிறார்.

பத்து வருடங்களுக்கு முன்னர் கூலித் தொழிலாளியின் மகனாக இருந்த நந்தகுமார் தற்போது மருத்துவர் ஆக மாறியிருக்கிறார். சூர்யா செய்திருக்கும் இந்த உதவியை பலரும் பாராட்டி வருகின்றனர்.