நாளுக்கு 400 முதியவர்கள்… கொரோனா உச்சத்தின்போது பிரித்தானியாவில் ஏற்பட்ட துயரம்!!

387

பிரித்தானியா………

கொரோனா உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் பிரித்தானியாவில் செயல்பட்டு வந்த முதியோர் இல்லங்களில் நாளுக்கு 400 பேர் இறந்ததாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

இறப்பு எண்ணிக்கை அதிகரிக்க காரணம், முதியோர் இல்லங்களில் பணியாற்றும் ஊழியர்கள் பல காப்பகங்களில் பணியாற்றும் சூழல் ஏற்பட்டதே என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

மேலும் பாதுகாப்பு கருவிகள் பற்றாக்குறை, முதியோர் இல்ல ஊழியர்களுக்கு உரிய சோதனைகளும் மேற்கொள்ளப்படவில்லை என தெரிய வந்துள்ளது.

ஏப்ரல் மாத மத்தியில் மட்டும் ஒரு வார காலத்தில் முதியோர் இல்லங்களில் வசித்துவந்த சுமார் 3,000 பேர் இறந்துள்ளனர்.


ஏப்ரல் 17 ஆம் திகதி ஒரே நாளில் அதிகபட்சமாக 500 பேர் கொரோனா தொடர்பில் இறந்துள்ளனர்.

இதே காலகட்டத்தில் இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்து உள்ளிட்ட எங்கும் பரவலாக கொரோனா சோதனை மேற்கொள்ளப்படவில்லை.

மட்டுமின்றி, முதியோர் இல்ல ஊழியர்களுக்கு எவ்வித கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை.

அதே வேளை மருத்துவ சிகிச்சையில் இருன்ந்த ஆயிரக்கணக்கான முதியோர்கள் அவசர அவசரமாக முதியோர் இல்லங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.