நிர்வாண கோலத்தில் வீடியோ காலில் பேசி வியாபாரியிடம் ரூ.2.5 கோடி பறிப்பு : கணவன், மனைவி கைது!!

228

நிர்வாண கோலத்தில் வீடியோவில் தோன்றி வியாபாரியிடம் ரூ.2.50 கோடி பறித்த கணவன், மனைவியை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த 60 வயதான வியாபாரிக்கு, கடந்த 4 வருடங்களுக்கு முன்பு வாட்ஸ் அப் மூலம் இளம்பெண்ணின் அறிமுகம் கிடைத்துள்ளது.

அந்த நபர், ‘’தான் எர்ணாகுளத்தில் ஒரு விடுதியில் தங்கி படிப்பதாகவும் கல்லூரி கட்டணம் கட்ட பணம் இல்லாததால் ரூ.1000 பணம் அனுப்பித் தரமுடியுமா’’ என்றும் கேட்டுள்ளார்.

அதை நம்பிய வியாபாரி உடனடியாக இளம்பெண்ணுக்கு பணம் அனுப்பி வைத்துள்ளார். இதன்பிறகு நாளடைவில் 2 பேரும் நெருக்கமானதால் நேரில் பார்க்காமலேயே போனில் அன்பை பரிமாறி வந்துள்ளனர்.

இதை பயன்படுத்தி இளம்பெண் கேட்கும்போதெல்லாம் பணத்தை வியாபாரி அனுப்பி உள்ளார். அத்துடன் கிளுகிளுப்பாகவும் இளம்பெண் வியாபாரிடம் பேசிவந்ததால் அதற்கு தனியாக பணம் அனுப்பிவைத்து உள்ளதாக தெரிகிறது.

திடீரென ஒரு நாள் வீடியோ காலில் அழைத்த இளம்பெண் நிர்வாணமாக போஸ் கொடுத்துள்ளதால் வியாபாரி பதற்றம் அடைந்தார். அப்போதும் 2 பேரும் நீண்ட நேரமாக வீடியோ காலில் ஜாலியாக பேசியுள்ளனர்.

இந்தநிலையில் மறுநாள் மீண்டும் அழைத்த இளம்பெண், ‘’வீடியோ அழைப்பை காண்பித்து அதை உங்கள் உறவினர்களுக்கு அனுப்பி வைக்காமல் இருக்கவேண்டும் என்றால் தனக்கு கூடுதலாக பணம் வேண்டும்’’ என்று கூறி வியாபாரியை மிரட்டியுள்ளார்.


இதனால் பயந்துபோன வியாபாரி, இளம்பெண் கேட்கும் பணத்தை அனுப்பி உள்ளார். இப்படியாக தன்னிடம் இருந்த பணம் முழுவதும் காலியானதால் மனைவி, மாமியாரின் நகைகளை அடகு வைத்து ரூ.2.50 கோடி வரை இளம்பெண்ணுக்கு அனுப்பி உள்ளார்.

இந்தநிலையில் வியாபாரியின் மகனுக்கு இந்த விவரம் தெரியவந்துள்ளதால் அதிர்ச்சி அடைந்தார். அவர், உடனே தனது தந்தையுடன் சென்று திருச்சூர் மேற்கு காவல்நிலையத்தில் புகார் செய்தார்.

போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில், வியாபாரியை மயக்கி பணத்தை பறித்தது கொல்லம் அருகே உள்ள கருநாகப்பள்ளி பகுதியை சேர்ந்த ஷெமி (38), அவரது கணவர் கொல்லம் பெரிநாடு பகுதியை சேர்ந்த சோஜன் போஸ் (32) என்பது தெரியவந்தது.

இதையடுத்து 2 பேரையும் கைது செய்தனர். இவர்கள் வியாபாரியிடம் இருந்து பறித்த பணத்தில் 82 பவுன் நகைகள் மற்றும் விலையுயர்ந்த கார்களை வாங்கியது தெரியவந்துள்ளது. இதையடுத்து தம்பதியை திருச்சூர் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.