நீண்ட 16 ஆண்டுகளாக சாப்பிடவோ, துளி நீர் கூட சுவைக்காத பெண் அவர் சொன்ன காரணம்!!

434

ஆப்பிரிக்க நாடு ஒன்றின் உள் கிராமத்தில் வசிக்கும் பெண் ஒருவர் நீண்ட 16 ஆண்டுகளாக உண்ணவோ துளி நீர் கூட பருகவோ செய்தது இல்லை என கூறி வருகிறார்.

திடீரென்று ஒருநாள்

ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவை சேர்ந்தவர் Muluwork Ambaw. இவருக்கு 10 வயதாக இருக்கும் போது திடீரென்று ஒருநாள் சாப்பிடுவதையும் தண்ணீர் பருகுவதையும் நிறுத்திக் கொண்டதாக தெரிவித்துள்ளார்.

கடைசியாக தாம் சாப்பிட்டது சிவப்பு பருப்பில் செய்த உணவு என்றும் அவர் நினைவு கூர்ந்துள்ளார். குறித்த தகவல் பத்திரிகைகளில் கசிந்ததும், அமெரிக்க சமூக ஊடக பிரபலம் Drew Binsky அவரை நேரில் சந்தித்து, தாம் கேள்விப்பட்டது உண்மையா என வினவியுள்ளார்.

Muluwork Ambaw என்பவரின் கிராமத்திற்கே நேரிடையாக சென்ற Drew Binsky, அவரது குடியிருப்பைக் கண்டு வியந்துள்ளார். சக கிராம மக்களைவிடவும் பெரிய வீடு அவரது என்பதுடன், உயரமான சுற்று மதில்களுடன் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருந்தது.


அவரது குடியிருப்புக்குள் நுழைந்த Drew Binsky தாம் வேறொரு உலகத்தில் நுழைந்த உணர்வைப் பெற்றதாக குறிப்பிட்டுள்ளார். அவரது குடியிருப்பு ஆடம்பரமாக வடிவமைக்கப்பட்டிருந்தாலும், கழிவறை ஆப்பிரிக்க பாரம்பரிய முறைப்படி இருந்ததாகவும்,

Muluwork Ambaw பல ஆண்டுகளாக கழிவறையை பயன்படுத்தியதில்லை என்றும் கூறியுள்ளார். ஆனால் அவரது மகளும் சகோதரியும் பயன்படுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

ஒரு நாளின் பெரும்பாலான நேரத்தை Muluwork Ambaw தமது தோட்டத்தை பராமரிப்பதில் செலவிடுகிறார். அதில் காய்கறிகளை பயிரிட்டுள்ளார். விருந்தினர்களுக்காக நிறைய காய்கறிகளை விளைவிப்பதாக அவர் கூறியுள்ளார்.

கடவுளின் செயல்

சமையல் தமக்கு மிகவும் பிடித்தமான ஒன்று என குறிப்பிட்டுள்ள அவர், ஆனால் சாப்பிடும் உணர்வு அல்லது பசி என்பது தமக்கு ஏற்படுவதில்லை என குறிப்பிட்டுள்ளார். கடந்த 16 ஆண்டுகளாக இது தொடர்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பெற்றோர் கட்டாயப்படுத்தியும் தம்மால் சாப்பிடவோ, நீர் அருந்தவோ பிடிக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில், முலுவொர்க்கை எத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபாவில் உள்ள சிறப்பு மருத்துவர்கள் பரிசோதித்துள்ளனர்.

தொடர்ச்சியாக 3 ஆண்டுகள் ஆய்வுகள் மற்றும் பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்கள், Muluwork Ambaw முழு ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும், அவரது உடலில் உணவு அல்லது நீர் என எதன் கழிவும் காணப்படவில்லை என்றும் உறுதி செய்துள்ளனர்.

இதனாலையே அவருக்கு சிறுநீர் அல்லது மலம் கழிக்கும் சூழல் ஏற்படவில்லை என்றும் தெரிவித்துள்ளனர். மட்டுமின்றி, துபாய் மற்றும் கத்தார் நாட்டின் மருத்துவர்களும் முலுவொர்க்கை முழுமையாக ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளனர்.

அவர்களும் இது விசித்திரம் என்றே பதிவு செய்துள்ளனர். முலுவொர்க் கர்ப்பமாக இருந்த போது வளரும் குழந்தைக்கு ஊட்டமளிக்க குளுக்கோஸ் உட்செலுத்துதல் முன்னெடுக்கப்பட்டது. ஆனால் குழந்தை பிறந்த பிறகு அவரால் தாய்ப்பால் கொடுக்க முடியாமல் போயுள்ளது.

தமது இந்த நிலைக்கு காரணம் கடவுளின் செயல் என்றே முலுவொர்க் நம்புகிறார். பலர் இது பித்தலாட்டம் என விமர்சிக்க, வந்து என்னுடன் தங்கிவிட்டு அதன் பிறகு விமர்சியுங்கள் என முலுவொர்க் பதிலளித்துள்ளார்.