நீயே தற்கொலை செய்துகொள் இல்லையென்றால்?.. சுஷாந்த் சிங் காதலிக்கு வந்த பகீர் குறுந்தகவல்!

903

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்கின் மரணம் இந்தியா முழுவதும் உள்ள ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியையே ஏற்படுத்தியது.

அவரது, தற்கொலைக்கான காரணம் குறித்து போலிஸார் விசாரித்து வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் அவர் 6 மாதங்களுக்கு மேலாக மன அழுத்தத்தில் இருந்ததாக கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும், அவரது மரணத்தில் ஏதாவது மர்மம் உள்ளதா? என பல கோணங்களிலும் சிபிசிஐ விசாரணையை தொடங்கினர். ஆனால் மருத்துவ சோதனையில் அவர் தற்கொலை செய்துள்ளார் என்றும் மட்டுமே தகவல் வெளிவந்தது.

அவரின் மரணத்திற்கு முக்கிய காரணமாக பாலிவுட்டில் நிலவும் வாரிசுகளின் ஆதிக்கமே சுஷாந்தின் தற்கொலைக்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது.


இந்நிலையில், அவரது மரணம் குறித்து பலரும் கருத்துகளை தெரிவித்து வந்த நிலையில் சுஷாந்தின் காதலி ரியா சக்கரவர்த்தி தனது இன்ஸ்டாகிராமில்தனக்கு விடுத்த விரட்டல் மெசேஜ் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அதில், ” நீ கண்டிப்பாக கற்பழிக்கப்பட்டு தான் கொலை செய்யப்படுவாய். நீயாகவே தற்கொலை செய்து கொள் இல்லையென்றால் நான் ஆட்களை அனுப்பி உன்னை கொலை செய்து விடுவேன். என மிரட்டியுள்ளனர்.

இதனால், அந்த மெசேஜ் ஸ்க்ரீன் ஷாட்டை வெளியிட்டு இதற்கு பகிர்ந்து சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

இச்சம்பவம் ஆனது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியே இருக்கிறது.