இந்தோனேசியாவில் 300 குழந்தைகளை வன்கொடுமை செய்ததாக பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த முதியவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த நபரை இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் உள்ள உணவகத்தில் வைத்து கைது செய்துள்ளதுடன் அறையில் இருந்த இரண்டு சிறுமிகளையும் மீட்டுள்ளனர்.
ஆரம்பகட்ட விசாரணைகளில், 300 க்கும் மேற்பட்ட குழந்தைகளை வன்கொடுமை செய்ததாகவும், அவருடன் நெருக்கமாக இருக்க மறுத்தவர்களை அடித்து துன்புறுத்தியதாகவும் தெரியவந்துள்ளது.
இதுவேளை 10 முதல் 17 வயதுக்குட்பட்ட நூற்றுக்கணக்கான குழந்தைகளுடன் சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் வீடியோவை பொலிஸார் கையகப்படுத்தியுள்ளனர்.
இவருக்கு குழந்தைகள் பாதுகாப்புச் சட்டங்களின் கீழ் ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை விதிக்கப்படலாம் என்று அந்நாட்டுத்தகவல்கள் தெரிவிக்கின்றன.