பணம் தரலன்னா செத்துப்போ… மனைவியை மாடியிலிருந்து தூக்கி வீசி கொலை: கணவன் பரபரப்பு வாக்குமூலம்!!

172

உத்தரப் பிரதேசத்தில்..

உத்தரப் பிரதேச மாநிலம், அலிகார் மாவட்டம், சுரேந்திர நகரில் வசித்து வருபவர் கெளரவ் கெளதம் . இவருடைய மனைவி கெளரி . இதில் கௌதமுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. இதனால் அடிக்கடி கணவன் மனைவியிடையே சண்டை, சச்சரவு , தகராறு ஏற்படுவதுண்டு.

அவரது மனைவி பணம் தர மறுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த கெளரவ் கவுதம், மனைவியை மாடியிலிருந்து தூக்கி கீழே வீசி விட்டார். இதில் கெளரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தாய் உயிரிழந்து கிடப்பதை கண்டு குழந்தைகள் கதறி அழுதனர்.

குழந்தைகளின் அழுகுரல் கேட்டு அப்பகுதியில் வசிப்பவர்கள் அங்கு திரண்டனர். உடனடியாக இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கெளரியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.


இச்சம்பவம் குறித்து அலிகார் காவல் துணை கண்காணிப்பாளர் “இச்சம்பவம் குறித்து கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தனிப்படை அமைக்கப்பட்டு தலைமறைவாக இருந்த கெளரவ் கெளதம் கைது செய்யப்பட்டார். அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.