பணம் தராததால் ஆத்திரம்… மனைவியை அடித்தே கொலை செய்த கணவன்!!

269

மகாராஷ்டிராவில்..

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை மல்வானி பகுதியில் வசித்து வருபவர் மொய்னுதின் அன்சாரி. இவரது மனைவி பர்வீன் . மொய்னுதின் சமீபகாலமாக மதுபழக்கத்திற்கு அடிமையானார். இதனால், கணவன் – மனைவி இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

மதுகுடிக்க பணம் கேட்டு மனைவி பர்வீனுக்கு அன்சாரி அடிக்கடி தொல்லை தரத் தொடங்கினார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. வழக்கம் போல் நவம்பர் 7ம் தேதி வியாழக்கிழமை மதுகுடிக்க பணம் தரும்படி மீண்டும் தகராறு செய்தார்.

மதுகுடிக்க பர்வீன் பணம் கொடுக்காததால் அன்சாரி ஆத்திரத்தில் மனைவியை கொடூரமாக தாக்கினார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்ததும் அன்சாரி தப்பி சென்றார். பர்வீனை மீட்ட அக்கம்பக்கத்தினர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.


பர்வீனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தப்பட்டது. இதன் பேரில் தப்பியோடிய அன்சாரியை பெரிவாலி ரயில் நிலையம் அருகே காவல்துறை கைது செய்தது.