பள்ளி மாடியில் இருந்து குதித்து 12ம் வகுப்பு மாணவன் எடுத்த விபரீத முடிவு!!

7

சமீப காலங்களாக தமிழகத்தில் பள்ளி, கல்லுரி மாணவர்கள் அதிகளவிலான மன அழுத்தத்தில் இருந்து வருவதாக ஆய்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள், பெற்றோர்கள்,

தமிழக அரசு என இது குறித்து யாரும் அதிகம் அக்கறைக் கொள்வதாக தெரியவில்லை. மாணவர்களுக்கு மன அழுத்தங்களைக் குறைப்பதற்கான உளவியல் ரீதியிலான சிகிச்சை முறையும், அன்பாக அரவணைத்து செல்லும் போக்கும் உடனடி அவசிய தேவையாகிறது.

இந்நிலையில், கரூர் மாவட்டத்தில் பள்ளியின் மாடியில் இருண்டு 12ம் வகுப்பு மாணவர் ஒருவர் கீழே குதித்து தற்கொலைச் செய்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம் வடிவேல் நகரில் வசித்து வருபவர் ராஜேந்திரன். இவரது மகன் அஜய்(17). நாமக்கல் மாவட்டம் கூலிப்பட்டி பகுதியில் உள்ள சைதன்யா தனியார் பள்ளியில் அஜய் 12ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

பள்ளி விடுதியில் தங்கியிருந்தபடியே 12ம் வகுப்பு படித்து வந்த அஜய், வழக்கம் போல் பள்ளி வகுப்பு முடிந்ததும், விடுதிக்கு சென்ற நிலையில், திடீரென மாலை 6 மணியளவில் விடுதியின் 2வது மாடிக்கு சென்று,

அங்கிருந்து கீழே குதித்துள்ளார். இதில் தலையில் படுகாயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு நாமக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.


அதன் பிறகு மேல் சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மாணவர் அஜய் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது குறித்து நாமக்கல் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.