பள்ளி மாணவிகள் குளத்தில் மூழ்கி பலி : குளிக்கச்சென்ற போது சோகம்!!

47

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா தொண்டி அருகே பாசிப்பட்டிணம் பகுதியில் வசித்து வருபவர் சித்திரவேல்.

இவரது மகள் வைத்தீஸ்வரி. அதே போல் பாலமுருகன் மகள் பிரீத்தி மற்றும் நாயகம் என்பவரது மகள் நர்மதா இவர்கள் மூவரும் பள்ளிவாசலுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். சேற்றுடன் இருந்த ஆழமான பகுதிக்கு சென்ற மூன்று சிறுமிகளுக்கும் நீச்சல் தெரியாது.

இதனால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு நீரில் மூழ்கத் தொடங்கினர். இதைக்கண்டு மற்ற சிறுமிகள் கூச்சலிட்டதில் அக்கம் பக்கத்தினர் மூவரையும் மீட்டு அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர்.

இதில் ஏற்கனவே வைத்தீஸ்வரி மற்றும் ப்ரீத்தி இருவரும் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். உயிருக்கு போராடிய நிலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி நர்மதாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். குளத்தில் மூழ்கி பலியான பிரீத்திக்கு 11 வயதும், வைத்தீஸ்வரிக்கு 10 வயதும் என்பது குறிப்பிடத்தக்கது.