கிஷோர்…
ஒடிஷா மாநிலம் கேம்பரிபட்டியா கிராமத்தை சேர்ந்த 45 வயதான விவசாயி கிஷோர் பத்ரா என்வர் தான் பாம்பை பழிவாங்கிய ஸ்நேக் பாபு..!
சம்பவத்தன்று இரவு விவசாயப்பணி முடிந்து வீட்டிற்கு திரும்பிய பத்ராவின் காலில் ஏதோ பூச்சி கடித்தது போல இருந்தது. உற்று பார்த்த போது அவரை கடித்தது பாம்பு என்பது தெரியவந்துள்ளது. பாம்புக் கடியை பொருட்படுத்தாமல், தனது வீட்டுக்கு சென்று டார்ச் லைட்டை எடுத்து வந்து தன்னை கடித்த பாம்பை தேடிப்பிடித்தார்.
அந்த பாம்பை கையால் பிடித்து தூக்கிய பத்ரா, அதனை பழிவாங்கும் விதமாக திருப்பிக் கடித்ததாக சொல்லப்படுகிறது. அந்த பாம்பு மீண்டும் அவரை கடிக்க எத்தனிக்க பத்ராவின் பற்களுக்கு இடையே சிக்கிய பாம்பு சின்னாபின்னமாகி சிறிது நேரத்திலேயே பரிதாபமாக பலியானதாக கூறப்படுகிறது.
இது குறித்து பேசிய பத்ரா, தன்னை தீண்டியது கிரைட் வகையை சேர்ந்த விஷப்பாம்பு என்றும் தன்னை கடித்ததால் ஏற்பட்ட ஆத்திரத்தில் அந்த பாம்பை திருப்பிக் கடித்துக் கொன்றதாக தெரிவித்துள்ளார்.
பாம்பு கடித்ததால் அவருக்கு எந்த பாதிப்பும் இல்லையென்றாலும் தனது கிராமத்தில் உள்ள மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சை எடுத்துக் கொண்டதாக கூறப்படுகின்றது.
பழிக்கு பழி… ரத்தத்துக்கு ரத்தம்…. என்று எவ்வளவோ ரிவென்ஞ் கதைகளை கேள்விப்பட்டிருந்தாலும் பத்ராவின் செயல் வேற மாறி பழிவாங்கும் சம்பவம் என்று வியப்புடன் விமர்சித்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
அதே நேரத்தில் இந்த சம்பவத்தை பார்த்து வேறு யாரும் முயற்சிக்காதீர் என்று கூறும் நம்ம ஊரு வனத்துறையினர் வனவிலங்குகளை கொன்றதற்காக கம்பி எண்ண நேரிடும் என்று எச்சரித்துள்ளனர்.