பாத யாத்திரை சென்ற தமிழக பக்தர்கள் மீது மினி லாரி மோதி விபத்து!!

334

திருப்பதி…

திருப்பதி மலைக்கு பாதயாத்திரை சென்ற தமிழக பக்தர்கள் மீது லாரி மோதி ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

 

சென்னை வேளச்சேரியில் இருந்து ஏழுமலையானை தரிசிப்பதற்காக திருப்பதி மலைக்கு பாதயாத்திரையாக நடந்து சென்று கொண்டிருந்த பக்தர்கள் மீது ஆந்திர மாநிலம் வடமாலபேட்டை அருகே லாரி மோதி விபத்து ஏற்பட்டது.

 

இதில் தியாஜராஜன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் பரந்தாமன், கார்த்திக் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். ஏழு பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது.


 

தகவல் அறிந்த வடமலை பேட்டை போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு திருப்பதியில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். சம்பத்திற்கு காரணமான லாரி டிரைவர் தலைமறைவானார்.

 

லாரியை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்துகின்றனர். நிறுத்திவைக்கப்பட்டிருந்த லாரியை ஓட்டுவதற்காக பின்னோக்கி செலுத்திய போது விபத்து ஏற்பட்டது என்று போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.